Saturday, December 24, 2022

இரு தார ஜாதகம்

🍁 இருதார யோகம்...?! இல்லை தோசம் 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

" என்னப்பா... பதிவு தலைப்புலேயே இவ்வளவு குழப்பதை உண்டு பண்றே..? பதிவு தலைப்புலேயே இப்படி குண்டு வைக்கிறீங்க , பதிவுக்குள்ள என்னத்தை வைத்து இருக்கீங்க..? " அப்படினு சிலர் யோசிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இருதாரம் என்பது யோகமா..?! இல்லை தோசமா...?! என்றால் அதை அனுபவிக்கும் அந்த ஜாதக நிலையை பொறுத்தது. 

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவி அமைந்து இருவருக்கும் இடையே ஜாதகர் அல்லோல் படுவது தோசம்... தார தோசம்... 

முதல் மனைவி பிரிவு அல்லது இழப்பிற்கு பிறகு இரண்டாம் மனைவி அமைவது யோகம்.

சரி இது இது யோகமா..? தோசமா..? என்று சாலமன் பாப்பையா அவர்களை போல பட்டிமன்றம் நடத்த போவது இல்லை. #padmahazan 


கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக அமைப்பை பாருங்கள். 

சிம்ம லக்னம். இரண்டில் உச்ச புதன். மூன்றில் சூரிய சனி. 

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நீசம் ஆகிறார் என்றாலே அவர் நீசமான பாவகம் சார்ந்த அடியை ஜாதகர் வாங்க போகிறார் என்று சொல்லலாம்.

இங்கே சூரியன் மூன்றில் நீசமாகி உச்ச சனியோடு இணைந்து நீசபங்கராஜயோக நிலையில் உள்ளார். ஆயினும் பலன்...? 

ஒரு கிரகம் தனக்கு முற்றிலும் ஆகாத கிரக தொடர்பை பெறும் போது அந்த கிரக ரீதியான பாதிப்பை அந்த ஜாதகருக்கு தரும். 

முதல் மனைவியோடு ஜாதகருக்கு பிரச்சனை, பிரிவு. 

ஏழாம் அதிபதி உச்சமே ஆயினும் இங்கே அந்த அதிபதி நீச சூரியனோடு இணைந்த உச்ச வலுவை இழந்து போகிறார். அஸ்தங்கமும் அடைந்து விட்டார். 

சிம்ம லக்னத்தை பொறுத்தவரை, லக்னமும் ஏழும் அதாவது சூரியனும் சனியும் இணைவது என்பது மற்ற லக்னங்களை போல இணை பிரியாத தம்பதிகளை தந்துவிடும் என்ற அமைப்பை இங்கே இவர்கள் தர மாட்டார்கள். 

ஜாதகருக்கு நடப்பில் சிம்ம லக்னத்திற்கு வர கூடாத சனி தசா அதுவும் சூரியன் இணைவில் கெட்டு வலுஇழந்த நிலையில்... மனைவியால் இவருக்கு பாதிப்பு இவரால் மனைவிக்கு பாதிப்பு.சனி தசா வராவிட்டால் இந்த பலன் நடப்பில் இருந்து இருக்காது. 

களத்திர காரகன் சுக்ரனும் பாதக வீட்டிற்கு மறையாத செவ்வாயோடு இணைந்து இருந்துள்ளார். சுக்ரனுக்கு பாதகாதிபதி தொடர்பு. 

முதல் துணை பிரிவு பாதிப்பு என்று தெரிந்து விட்டது. இரண்டாம் வாழ்க்கை நன்றாக அமையுமா..? என்றால்...

இளைய தாரத்தை குறிக்கும் லாபாதிபதி புதன் லாப வீட்டிற்கு மறையாமல் தன ஸ்தானத்தில் உச்சமாகி எந்த வித பாவ கிரக தொடர்பும் இன்றி சனி தசா பிறகான புதன் தசாவாக வர போகிறார். #padmahazan 

நடப்பில் உள்ள சனி தசாவை விட மேம்பட்ட பொருளாதார முன்னேற்றம் தன சேர்க்கை குடும்ப வாழ்வில் நிம்மதி போன்ற யோகத்தை புதன் தசா தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பின்குறிப்பு : 

அந்த கிரகம் எங்கே..? இந்த கிரகம் எங்கே..? என்று யாரும் கேட்க வேண்டாம். தனிநபர் சார்ந்த விபரங்களை வெளியிட வேண்டாமே என்கிற எண்ணமே.

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...