🌿ஜாதகத்தில் 8ல் பாவ கிரகங்கள் மறைவது யோகமா..? தோசமா..? 🌿#hazan
⛔️⛔️⛔️*இளகிய மனம்
பயந்த சுபாவம் கொண்டவர்கள் பதிவை தவிப்பது நல்லது, முன்பே அறிவுறுத்தபடுகிறது*⛔️⛔️⛔️
💥🌿8 ம் இடத்தில் பாவ கிரகங்களான சனி , செவ்வாய் , ராகு மற்றும் கேது போன்றவை சேர்க்கை பெற்று இருப்பது யோகமாகாது. மாறாக அவை கெடுபலனை தரும் ஆற்றலை பெற்றுவிடும். இதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் உங்களுக்கு சொல்கிறேன். 🌿💥
🌿ஜோதிட சாஸ்திரத்தில் 3 6 8 12 என்னும் மறைவிடங்களில் பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு கேது போன்றவை இருப்பது கெட்டவன் கெடுவது யோகம் என்று சொல்லபட்டாலும், #padmahazan
🌿அது பெண் ஜாதகமாக அமையும் போது அந்ந பெண்ணிற்கு அந்த பாவ கிரகங்கள் பாதிப்பை கூடுதலாக தந்துவிடும்.
🌿எட்டாம் இடத்தை மர்ம ஸ்தானம் என்போம், அந்த மறைவிடம் ஜாதகருக்கு அடி வயிற்றையும் அதனை சுற்றி இருக்கும் பாலின உறுப்புகளை குறிக்கும்.
🌿 ஜாதகரின் வாழ்க்கை துணையான 7 ம் இடத்திற்கு 2 இடமான வாழ்க்கை துணையின் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் பாவகமாக அமையும்.
🌿அதே போல் எட்டாம் இடம் ஒருவருக்கு ஆயுள் ஸ்தானம் என்பதை போல ஒருவரது இரண்டாம் இடம் வாழ்க்கை துணையின் ஆயுள் ஸ்தானம் ஆக அமையும். #padmahazan
🌿இத்தகைய நிலையில் எட்டில் பாவ கிரகங்களான சனி செவ்வாய் ராகு அல்லது கேது போன்றவை இணைவது சிறப்பு கிடையாது.
🌿எட்டில் சனி மற்றும் செவ்வாய் இணைந்து இருவரது தசா வரும் போது வாழ்க்கை துணைக்கு ஆயுள் கண்டத்தை தரும், வாழ்க்கை துணைக்கு போராட்டமான கால கட்டமாக அமைந்துவிடும்.
🌿வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் அதிபதி பகை நீசம் அல்லது 6 12 ல் மறைந்து பலவீனமாகி இருக்கும் நிலையில், எட்டில் சனி செவ்வாய் இணைவது சனி ராகு இணைவது செவ்வாய் கேது இணைவது போன்றவை ஜாதகரது வாழ்க்கை துணை ஆயுளை பாதித்து இழப்பை தந்துவிடும்.
🌿ஏழாம் அதிபதி நன்றாக கேந்திர கோணமாக அமைந்து நட்பு வீடுகளிலோ குரு பார்வையிலோ அமைந்துவிட்டால் வாழ்க்கை துணை ஆயுளை பாதிக்காது மாறாக ஜாதகரது தன ஸ்தானமான 2 ம் வீட்டை பார்க்கும் போது 8ல் மறைந்த பாவர்கள் ஜாதகரது குடும்ப வாழ்வில் பாதிப்பை தருவது, குடும்பத்தை பிரிப்பது , பொருளாதார பாதிப்பை கொடுத்து கடுமையான மன அழுத்தம், நிம்மதி இழப்பு போன்ற கெடுபலனை எட்டில் மறைந்த பாவர்கள் தருவார்கள்.
எட்டில் மறையும் பாவிகள் சனி செவ்வாய் ராகு போன்றவர்கள் ஆறாம் இட சாரத்தை பெறுவது அல்லது நட்சத்திர சார நாதன் ஆறில் இருக்க தசா காலத்தில் தீராத உடல் உபாதைகளை தருவார்கள்.
🌿அடி வயிற்றில் உண்டாகும் மூலம் , பௌத்திரம் , குடல் வால் வெடிப்பு காரணமாக உண்டாகும் கடுமையான நோய் தொற்று , கருப்பை நோய் தொற்று , கருப்பை புற்றுநோய் , விதைப்பையில் உண்டாகும் வீக்கம் சதை வளர்ச்சி , ஹைட்ரோசில் பாதிப்பு போன்றவற்றை தருவார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌿உதாரணமாக
8ல் ராகு இருக்க,
💥 ராகு சனியின் ராசியில் இருந்து, செவ்வாயின் பார்வை அல்லது இணைவை பெறுவது,
💥 ராகு செவ்வாயின் ராசியில் இருந்து , சனியின் பார்வை அல்லது இணைவை பெறுவது,
💥ராகு விற்கு சனி மற்றும் செவ்வாயின் இணைவை பார்வை பெற்று,
ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகமும் பலவீனமான இருக்க,
💥அந்த ராகு தன் தசாவில் 8ம் வீட்டின் அறுவை சிகிச்சையை விபத்து , ஆரோக்கிய குறைபாடு , சதை வளர்ச்சி , மாதிரியான மருத்துவ செலவும் ரண வேதனையும் தரும்.
🌿மறைவு ஸ்தானம் அந்த ஜாதகரது அடி வயிற்று உறுப்புகளை குறிப்பதால் அது சம்மந்தப்பட்ட பலவீனத்தை காட்டி, அறுவை சிகிச்சை தரும்.
🌿அடி வயிற்றில் உண்டாகும் அப்பெண்டிஸ் குடல் வால் அறுவை சிகிச்சை , கருப்பை கட்டி அறுவை சிகிச்சை , ஹெர்னியா போன்ற விதை சார்ந்த பாதிப்பை தந்து , அறுவை சிகிச்சை மருத்துவமனை செலவுகளை தந்துவிடும்.
🌿எட்டில் சனி + சுக்ரன் + செவ்வாய் இணையும் போது மனைவிக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை அல்லது ஜாதகருக்கு மலட்டுதன்மை கொடுத்து விந்து உற்பத்தி பாதிப்பை கொடுக்கும். புரோட்டோஸ்டேட் சுரப்பி ஆண் ஹார்மோன் உற்பத்தி பாதிப்பு ஏற்படுத்தும்.
🌿பெண்களுக்கு சந்திரனோடு சனி இணைந்து எட்டில் இருப்பது, சந்திரனோடு ராகு இணைந்து இவர்களை சனி பார்ப்பது போன்றவை கருப்பை நீர்கட்டிகளை உருவாக்கி உடல் பாதிப்பை கொடுத்துவிடும்.
🌿எட்டில் செவ்வாய் கேது , சுக் கேது இணைந்து செவ்வாயின் பார்வை பெற்றுவிடும் நிலையில் கருப்பை நீக்கம் செய்யும் நிலையை சுக்ர தசாவோ கேது தசாவோ கொடுத்துவிடும்.
🌿எட்டில் கேது என்பது பாவ கிரக தொடர்பை பெற்று தசா நடத்தும் போது குடல் அழுத்தம் காரணமாக வயிறு தொடை சேரும் இடத்தில் குடல் பிதுக்கமாக வெளி தள்ளி கடுமையான வலியை தருவது, பெண்களுக்கு கருப்பை இறக்கம், போன்றவற்றை தரும். வெட்டுவது நீக்குவது போன்றவற்றை கேது குறிப்பார்.
💐சில மாதங்களுக்கு முன்பாக என்னிடம் பலன் கேட்க வந்த பெண்ணின் ஜாதகம்.
" ஹாசன் சார், கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது குழந்தை இல்லை , மருத்துவரை பார்த்தேன் , கருப்பை பாதிப்பு இருப்பதாக சொன்னார், எப்போது சரியாகும்..? " சொல்லுங்க என்றார்.
மேஷ லக்னம் எட்டில் விருச்சிக ராகு அந்த ராகுவிற்கு 11 ல் ஆட்சி பெற்ற சனியின் 10 ம் பார்வை, ராகுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் நான்கில் நீசம் அவரும் லக்னாதிபதி ஆகிறார்.
நடப்பில் ராகு தசா, சந்திர புத்தி...
ராகு தசா கடுமையான அஷ்டம பலனை தந்து கொண்டு உள்ளார். ராகு தசா சந்திர புத்தி செவ்வாய் புத்தி கடுமையான கால கட்டம். குரு தசா வரும் போது குழந்தையை தரும் அதுவரை மருந்து எடுத்து கொள்ளுங்கள் " என்றேன்.
🌿இன்னும் சிலவற்றை வெளிப்படையாக கூற வேண்டும் என்றால்...
🌿வயதான ஆண்களுக்கு விரை வீக்கம் காரணமாக நடக்க முடியாமல் நரக வேதனையில் வலியால் பாதிக்கபடுவதும் குரு தொடர்பு இன்றி சுக்ரனும் எட்டாமிடமும் பாவ கிரகங்களால் பாதித்து 50 வயது மேல் அந்த தசா நடைமுறையில் இருப்பதுமே.
🌿எட்டாம் வீட்டிற்கு செவ்வாய் தொடர்பு இருந்தால் கூட அறுவை சிகிச்சை மூலமாக குணபடுத்த முடியும், செவ்வாய் தொடர்பு இன்றி சனி தொடர்பு மட்டும் 8ல் இருக்க பாதிப்போடு வேதனை பாவர்களால் உண்டான எட்டாமிடம் தரும்.
🌿எட்டில் சனி மறைந்தவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துவிடும். சனி தனித்து எட்டில் மறைவது ஆயுளுக்கு மட்டும் நல்லது. நல்ல ஆயுள் பலத்தை ஜாதகருக்கு தருவார். #padmahazan
🌿இருப்பினும் அந்த எட்டில் மறைந்த சனி தசா காலம் வந்தால் , உதாரணமாக 50 வயதில் வரும் போது ஜாதகருக்கு ஆயுள் பலத்தை கொடுத்து,
🌿வாழ்க்கை துணை ஆயுள் பாவகமான ஜாதகரது தன வீட்டை பார்த்து வாழ்க்கை துணைக்கு ஆயுள் பாதிப்பை தருகிறார்.
ஒரு பெண்மணி ஜாதகத்தில் எட்டில் சனி மறைந்து கூடுதலாக ஏழாம் அதிபதி பலவீனபட்டால் , அந்த பெண்மணிக்கு வரும் 8 மிட சனி தசா கணவரது ஆயுளை பாதிக்கும். குரு பார்த்தால் இணைந்தால் பாதிப்பு இருக்காது.
🌿மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டில் பாவ கிரகங்கள் இணைவதை அவ்வளவு சிறப்பாக எடுத்து கொள்ள கூடாது. மாறாக அவை ஜாதகரது குடும்ப வாழ்வில் குழப்பத்தை பிரிவை, பொருளாதார தன பாதிப்பை, வாழ்க்கை துணை இழப்பை உண்டு செய்கிறது.
🌿பொருத்தம் பார்க்கும் நிலையில் கூட 7 இடத்தில் பாவ கிரகங்கள் இணைவதை போலவே 8 இடத்தில் பாவ கிரகங்கள் சுப கிரக குரு பார்வை இணைவை பெறாத போது மாங்கல்ய பலத்தை இழப்பதால் பல ஜோதிடர்கள் அத்தகைய ஜாதகங்களை பொருத்தம் இல்லாதபடி நிராகரிக்கவும் செய்கிறார்கள். பத்மஹாசன் அவரோட பதிவுல சொல்லிட்டார் என்று யாரும் 8ல் பாவர்கள் இணைந்து இருப்பவர்கள் பயபட வேண்டாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
⛔️⛔️இதற்கு விதி விலக்காக...⛔️⛔️
8 ல்
💐சனி + ராகு இணைவது ,
💐சனி + கேது இணைவது,
💐சனி + செவ்வாய் இணைவது,
💐செவ்வாய் + ராகு இணைவது ,
💐செவ்வாய்+ கேது இணைவது,
💐ராகு + செவ்வாய் இணைந்து
💐சனியால் பார்க்கபடுவது,
💐சனி + ராகு இணைந்து
💐செவ்வாயால் பார்க்க படுவது,
💐சுக்ரன் + சனி + செவ்வாய் இணைவது,
💐சுக்ரன் + கேது+ சனி இணைவது
சந்+ராகு + சனி இணைவது
🌟போன்ற நிலையில் இந்த கிரக இணைவை குரு தனது 5 7 9 பார்வையாக,
🌟லக்னத்திற்கு 4 இடத்திலிருந்தோ, 2 ம் இடத்திலிருந்தோ , 12 இடத்திலிருந்தோ, பார்க்கும் போது கெடுபலனை குறைப்பார் அல்லது நடக்காமல் பார்த்து கொள்வார்.
🌟பார்க்கும் குரு நட்பு , ஆட்சி , உச்ச வலுவை பெற்று இருந்தால் கூடுதலாக பார்வை வலுவாக அமைந்து 8ல் மறைந்த பாவர்களை சாந்தபடுத்தி,
🌟🌟" வெயில் காலத்தில் மோரில் சர்க்கரை போட்டு நுரை வரும் அளவிற்கு கலக்கி கொடுக்கும் , லெசி போல குளு குளு வென , எட்டில் மறைந்த பாவர்களது கொடூர குணத்தை குறைத்து அல்லது நல்லவர்களாக மாற்றி கொடுப்பார். 🌟🌟
⛔️⛔️ குரு பார்க்கவில்லை என்றாலும் 8 ல் நின்ற பாவர் தசா வராத வரை பாதிப்பு இருக்காது ⛔️⛔️
🌟எட்டில் மறைந்த பாவர்களை சுக்ரனோ புதனோ சந்திரனோ 2ம் வீட்டிலிருந்து பார்க்கும் போது எட்டில் இருக்கும் பாவர்கள் கெடுபலனை தர மாட்டார்கள்.
🌟மாறாக " ஜாதகரை காப்பாற்றுகிறேன் " என்று சுக்ரனோ புதனோ சந்திரனோ எட்டில் சனி செவ்வாய் ராகு கேதுவோடு இணைந்தால்,
🌟ஜாதகரை காப்பாற்ற போய் இந்த சுக்ரன் புதன் சந்திரன் பாவர்களிடம் சிக்கி , சுக்ரன் சந்திரனும் தனது தசாவில் கொடிய கெடுபலனை தருவார்கள்.
🙏🙏முருக பெருமான் , ஆஞ்சநேயர் , கால பைரவர் , துர்க்கை வழிபாடு மேற்கண்ட பாதிப்பில் இருந்து ஜாதகரை காக்கும். 🙏🙏
🌟இறுதியாக சொல்லி கொள்வது,
" 8ல் பாவர்கள் இணைவது தோசம், குரு பார்க்க யோகம் "
குரு பார்க்க அப்படி என்ன யோகம்..? என்று அடுத்த பதிவில் எழுதுகிறேன்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment