Friday, November 4, 2022

நிம்மதியாக இருக்கும் ராசிக்காரர்கள் யார்..?

🍁 நிம்மதியாக இருக்கும் ராசிக்காரர்கள் யார்..? 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

ஜோதிடத்தில் கோட்சாரத்தை பொறுத்தவரை...

சனியால் கும்ப ராசிக்கு ஜென்ம சனி(1), மீன ராசிக்கு விரைய சனி(12), மகர ராசிக்கு பாத சனி(2), கடக ராசிக்கு அஷ்டம சனி(8), சிம்ம ராசிக்கு கண்டக சனி(7), விருச்சிக ராசிக்கு அர்தாஸ்டம சனி(4) சனி பகவான் மட்டுமே 6 ராசிகளை ஆட்டி வைக்க போகிறார். 

ராகு மேஷ ராசிக்கு ஜென்ம ராகு, கேது துலாம் ராசிக்கு ஜென்ம கேது, ராகு கேது 2 ராசிகளை ஆட்டி வைக்கின்றனர். 

மொத்தம் 12 ராசிகளில் 8 ராசிகாரர்கள் சனி மற்றும் ராகு கேது வால் பாதிக்கிறது. 

இது போக மாதம் மாதம் உண்டாகும் சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் உண்டு. தொந்தரவு 12 ராசிக்கும் ஒரு மாதத்தில் உண்டு. 

மேலும் கோட்சாரத்தில் அவ்வப்போது உண்டாகும் உச்ச நீச கிரகத்தின் தாக்கமும் உண்டு. 

இத்தனை கெடுபலனையும் ஒற்றை குரு பகவானால் தடுக்க முடியுமா..? நிச்சயமாக கட்டுப்படுத்த இயலாது.

இப்ப என்னதா சொல்ல வறீங்கனு நீங்கள் கேட்பது புரிகிறது. 

12 ராசிக்காரர்களுமே எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையில் நிச்சயமாக இருப்பார்கள்.

அனைவருக்குமே வயிற்று வலி உண்டு. ஒருவருக்கு சாப்பிடாமல் பசியால் வயிறு வலி, மற்றொருவருக்கு செரிமானம் ஆகாமல் வயிறு வலி. அவ்வளவுதான்.

அனைவருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். நிம்மதியாக எல்லாம் இங்கே யாரும் இல்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் போல தகுதிக்கு ஏற்ற தலைவலி அனைவருக்கும் இருகிறது. 

யாரும் எனக்கு ஒரே பிரச்சனை ஆக உள்ளது என புலமபாதீங்க, ஏதும் இல்லாதவர்கள் "எனக்கு ஏதும் அமையவில்லை" என அழுவார்கள். எல்லாம் அமைத்தவர்கள் "இதை எல்லாம் எப்படி பார்த்து கொள்வது..? எப்ப என்ன ஆகும்..?" னு அழுவார்கள். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...