🍁 பிறரை அடக்கி ஆள நினைப்பவர்கள் யார்..? 🍁 #hazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பொதுவாகவே ஜோதிடத்தில் சொல்லபட்ட சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்கள், அதற்கு அடுத்ததாக மேஷ ராசி லக்னத்தில் பிறந்தவர்கள்.
இந்த சிம்மமும் மேஷமும் மற்ற ராசிக்காரர்களை அடக்கி தனக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணமும் செயல்பாட்டையும் கொண்டு இருப்பார்கள். அதனை செய்தும் காட்டுவார்கள்.
சரிங்க... மற்ற ராசிக்காரர்கள் எல்லாம் அடங்கி போகும் அடிமையா..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பிற லக்ன ராசிகளில் பிறந்தாலும் எத்தகைய கிரக அமைப்பு ஒருவருக்கு அடக்கி ஆளும் குணத்தை தரும் என்பதை காணலாம். #padmahazan
ஆண் ராசிகளான மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவற்றில் ஒருவரது லக்னம் அமைந்து
லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் நின்று அந்த செவ்வாய் லக்னத்தை 4ம் பார்வையாக பார்ப்பது,
லக்னத்தில் அரச குணமும் தலைமை பண்பை தரும் சூரியன் இருப்பது, அல்லது ஏழில் சூரியன் இருந்து லக்னத்தை பார்ப்பது,
அதாவது 1 7 இடங்களில் சூரியன் நட்பு ஆட்சி உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பது,
உதாரணமாக லக்னத்தில் சூரியன் இருந்து பத்தில் செவ்வாய் இருப்பது போன்ற நிலை,
மற்றவர்களை விட தனது கௌரவமும் செயலும் பிறரால் போற்றபட வேண்டும்,
நாம் பிறரை கட்டுபடுத்தி அதன் மூலம் பலருக்கு நாம் முன் உதாரணமாக இருக்கனும் போன்ற எண்ணம் ஜாதகருக்கு தரும்.
லக்னத்திற்கு கேந்திரம் என்ற 4 7 10 ல் சூரியன் நட்பு ஆட்சி உச்சமாகி
அதே அமைப்பு ராசிக்கு 5 9 ஆக இருப்பது, #padmahazan
ராசிக்கு 4 7 10 ல் சூரியனும் செவ்வாயும் இருந்து சூரியன் அல்லது செவ்வாய் ஆட்சி உச்சமாகி லக்னத்தோடு தொடர்பு கொள்ளும் போது மற்றவர்களை அடக்கி ஆள்வார்கள்.
பொதுவாக மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு மகரம் மீனத்தில் பிறந்து சூரியன் செவ்வாய் கேந்திரத்தில் வலுபெற்று இருந்தால் ஜாதகருக்கு நல்ல உடல் பலத்தையும் கட்டுமஸ்தான தோற்றத்தையும் கொடுக்கும்.
மருமகள்களுக்கு தனது மாமியார் ஜாதகத்தில் மேலே சொன்ன சூரிய செவ்வாய் கிரக அமைப்பு லக்னத்தோடு ராசியோடு இருந்து அந்த மருமகள்களுக்கு சுக்ரனும் சந்திரனும் இணைந்தோ நேருக்கு நேராக பார்த்து கொண்டாலோ
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பல ஆளுமை பிரச்சனை தரும் ,
நீயா..? நானா..? பிரச்சனை தரும்.
#PADMAHAZAN
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment