Friday, November 4, 2022

கேந்திர பாவகங்களில் பாவ கிரக பலன்

🍁 கேந்திர பாவகம் 🍁 #hazan 

ஜாதகத்தில் லக்னம் என்னும் ஒன்றாம் பாவகத்திலிருந்து 4 7 10 ம் பாவகங்களாக வரும் சதுரம் போன்ற அமைந்த ராசி மண்டலமே லக்ன கேந்திரம். 

இந்த லக்ன கேந்திர பாவகங்கள் பாவ கிரகங்களுக்கு ஏற்ற நல்ல பலனை கொடுக்கும் பாவகங்கள். 

1 4 7 10 ல் இருக்கும் இயற்கை பாவ கிரகங்கள் தங்களது பலனை கொஞ்சம் கூடுதலாகவே ஜாதகருக்கு கிடைக்க செய்யும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

அரை பாவியான சூரியன் , 

முக்கால் பாவியான செவ்வாய், 

முழு பாவியான சனி, 

தேய்பிறை பாவியான சந்திரன் , 

ராகு கேது விற்கு ஏற்ற பாவகங்கள் இந்த 4 7 10 பாவகங்கள். 

இன்னும் குறிப்பாக மேலே சொன்ன பாவ கிரகங்கள் நேர் வலு என்னும் ஆட்சி உச்ச வலுவை பெற்று 1 4 7 10 ல் இருக்கும் போது, 

சூரியன் _ அதிகார ஆளுமை, தலைமை குணம், அரசோடு தொடர்பு பெற்ற அங்கீகாரம், எதிலும் தனித்து இயங்கும் தனிபட்ட ஆளுமை போன்ற தலைமை குணத்தை தருவார். #padmahazan 

ரிஷப லக்னத்திற்கு 4ல் ஆட்சி பெற்று இருக்கும் சூரியன் வீடு வண்டி வாகன யோகத்தை ஆதிபத்திய பலனும், பத்தாம் வீட்டை பார்வை செய்து அரசியல் அரச வேலை அதிகார பதவியை கொடுப்பார். 

அரை பாவரான சூரியன் 4ல் ஆட்சி பெறுவது சிறப்பு. (சுக்ரன் இங்கே அஸ்தங்க பெற கூடாது) 

செவ்வாய் _ துணிச்சலான அனுகுமுறை , நில சேர்க்கை , பயம் இன்றி எதிலும் முன்னின்று செயல்படும் குணம், பிறரை கட்டுபடுத்தி வேலை வாங்குவது, பிறருக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற வீர குணத்தை தருவார். 

கடக லக்னத்திற்கு ஏழில் உச்சம் பெறும் போது நிலக்காரகன் ஆட்சி பெற்று இருப்பதால் அளவுக்கு அதிகமாக நிலச்சேர்க்கை , பாதுகாப்பு தரும் காவல் அதிகாரி, ராணுவ வீரர், அதிரடியான தலைமை அதிகாரி , நெருப்பு சார்ந்த பொறியாளர், எனர்ஜி பவர் சம்மந்தப்பட்ட வேலை தொழில் போன்ற பலனை உச்ச செவ்வாய் ஏழில் இருக்கும் போது தருவார். #padmahazan 

ஆயினும் ஏழாம் இடமான களத்திர வீட்டை கெடுப்பார். ராஜயோகதிபதி என்ற நிலை இங்கே எடுபடாது. 

முக்கால் பாவியான செவ்வாய் ஏழில் உச்சமாக முதல் கணவன் அல்லது மனைவியை பிரிக்கும், அல்லது இழக்க வைக்கும், ஏழாம் இடத்தை கெடுக்கும். குரு இணைவு பார்வை சந்திரன் பார்வை இணைவு பெற சுப பலத்தோடு கெடுபலனை உச்ச செவ்வாய் தராது. 

ஐந்தாம் அதிபதியாகி உச்சம் ஆவதால் நல்ல பெயர் எடுக்கும் அந்தஸ்து கொண்ட புத்திரர்களை உச்ச செவ்வாய் தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

சனி _ நிதானமாக செயல்பட வைக்கும் கிரகம், பொறுமையை விரும்பும் கிரகம், மக்களுக்கு சேவை செய்ய வைக்கும் கிரகம். 

4 7 10 ல் ஆட்சி உச்சம் பெற இரும்பு ஆலை வைத்து லாபம் பார்ப்பது, இரும்பு சார்ந்த வேலை பார்ப்பது, பழுது பார்க்கும் தொழில், பழைய பொருட்களை பராமரிக்கும் தொழில், மரக்கடை , மரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வது, விவசாயம், கிரீஸ் ஆயில் நிறுவன நிர்வாக வேலை, அரசியல் கடைநிலை அதிகார பணி, கிராம நிர்வாக அலுவலர் , ஊராட்சி பதவி வகிப்பது போன்ற பலனை தருவார். #padmahazan 

4ல் ஆட்சி உச்சம் பெற தாயார் உடல் சார்ந்த பாதிப்பை கொடுத்து பொருளாதார வளர்ச்சியை தருவார், 

7ல் ஆட்சி உச்சம் பெற மனைவி கணவன் தாம்பத்தியம் இவற்றை பாதித்து பிற தொழில் முன்னேற்றத்தை தருவார். 

10 ல் இருப்பது முதலில் போராடும் அங்கீகாரமற்ற தொழில் வேலையில் வைத்து பின் முன்னேற்றத்தை படிபடியே தருவார்.

(லக்னம் லக்ன அதிபதி வலு மற்றும் சனி பெற்று இருக்கும் சுப கிரக தொடர்பை பொறுத்து). 
பொதுவாக 1 4 7 ல் இருக்கும் பாவ கிரகங்கள் ஜாதகரது குணத்தை கெடுத்து, தாயாரை பாதித்து, மணவாழ்வை பாதித்து பின் பொருளாதார முன்னேற்றம் தொழில் முன்னேற்றத்தை தருவார்கள். #padmahazan 

ராகு கேது _ 

4 7  10 ல் இருக்கும் ராகு கேது தனது தசாவில் வீடு கொடுத்த கிரக வலுவை பொறுத்து வீடு வண்டி வாகன யோகத்தை கொடுத்து , ஒன்றிற்கு மேற்பட்ட தொழில் வழி முன்னேற்றத்தை கொடுத்து யோகத்தை தருவார்கள். 

அதே சமயம் இங்கே 

உச்ச சூரியனும் உச்ச சனியும் பார்த்து கொள்வது, 

ஆட்சி பெற்ற சூரியனை ஆட்சி பெற்ற சனி பார்த்து கொள்வது 

ஆட்சி பெற்ற சனியோடு உச்ச செவ்வாய் இணைவது, 

போன்ற நேருக்கு நேராக பார்த்து கொள்வது இணைந்து கொள்வது போன்றவை ஒன்றும் இல்லாத அல்லது பெரும் பாதிப்பை உண்டு செய்யும் கிரக நிலையாக மாறும். 

எந்த வித பிற பாவ கிரகத்தாலும் பாதிக்காத வகையில் 4 7 10 ல் சூரிய செவ்வாய் சனி இருப்பது நல்லது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...