🍁 இரண்டாம் திருமணம் 🍁 #hazan
கடந்த சில மாதங்களாகவே ஒன்றை கவனிக்க முடிகிறது...
முகநூலில் பல குழுக்களிலும் , தனிபட்ட ஜாதக பலனிலும் அதிகபடியான விவாகரத்து எப்போது நடக்கும் என்ற கேள்வியை பார்க்க முடிகிறது.
குடும்ப வாழ்வில் பிரச்சனை என்றாலும் பிரிவு இருக்காது என்று சொன்னாலும்
மறுபடியும் கொஞ்சம் ஜாதகத்தை பார்த்து பாருங்களேன் என்ற கேள்வியை கேட்க முடிகிறது.
முதல் திருமணம் முறிந்து ,
இரண்டாம் திருமணம் ஆகும் அனைவருமே சந்தோசமாக இருந்துவிடுவது கிடையாது.
இரண்டாம் மணம் என்றாலே நல்ல வாழ்க்கை அமையும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதை இந்த சினிமாவில் பார்த்து கற்று கொண்டார்கள் போல...
இரண்டாம் திருமணம் அமைந்த பிறகுதான் இங்கே பலருக்கு ஒன்று புரிகிறது,
இதற்கு முதல் துணையே பரவாயில்லையே... கொஞ்சம் அவசரபட்டுடோமோ..?
அவனுக்கு / அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இருக்கலாம் , நாம இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
அதை இரண்டாம் திருமணம் செய்தவர்களே சொல்லியும் இருக்காங்க...
என்னிடம் பலன் கேட்ட சிலரிடம் இதை கேட்டு அவர்களது புலம்பலை வைத்துதான் இதை எழுதுகிறேன்.
Second marriage என்பது ஒன்றும் premium product கிடையாது.
ஆளைதான் மாற்ற போகிறீர்கள் , அதற்காக இரண்டாவதாக அமையும் அவர்கள் உங்களுக்கு சிறப்பாகதான் இருப்பார்கள் என்று நினைத்து கொள்ளவும் கூடாது.
முடிந்த அளவு கிடைத்த ஒன்றை இழக்க நினைக்க கூடாது.
இறுதியாக
" பெண்கள் படிக்க ஆரம்பிச்சிடாங்க அவர்களை அடக்கி வைக்க முடியாது என்று பேசிதாங்க, சின்ன பிரச்சனையை விட்டு (முதல் துணை) இப்ப இன்னொரு பெரிய பிரச்சனைகிட்ட ( இரண்டாம் துணை) மாட்டி கொண்டேன் " என்று புலம்பும் நிலையில் எந்த பெண்ணையும் தள்ளிடாதீங்க...
பெரும்பாலான விவாகரத்து சுற்றி இருப்பவர்களால்தான் தூண்டி விடப்படுகிறது.
#padmahazan
No comments:
Post a Comment