Thursday, October 17, 2024

சூரியன் சனி இணைவு பார்வை பலன்கள்

🍁 சூரியன் சனி இணைவு பார்வை பலன்கள் 🍁 #hazan

⚡️சூரியன் முழு ஒளி கிரகம் , எப்போதும் மங்காத வெளிச்சம். சனி முழு இருள் கிரகம், தன்னகென ஓர் ஒளி இல்லாத அடர் நீலம் கலந்த கருப்பு இருள் கிரகம். இருவரும் எதிரெதிர் காரகத்துவ குணம் கொண்ட கிரகங்கள். 

⚡️சூரியன் சனி இணைவது , சூரியன் சனி நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது என்பது இருவரையும் கடுமையான பாதிக்கும். அந்த ஜாதகர் வாழ்க்கையும் பாதிக்கும்.

⚡️இளம் வயதில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ ஜாதகருக்கு தந்தை உடனான கருத்து வேறுபாட்டை உண்டாக்கும் #padmahazan , அல்லது தந்தையை இளம் வயதில் பிரிந்து வாழ வைக்கும். தந்தை பேச்சை அலட்சியபடுத்துவதாக தந்தை குறை சொல்வார். தந்தை வழி சொந்தம் மற்றும் சொத்து கிடைப்பதில் சிக்கல் வரும். 

⚡️மத்திம வயதில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ தொழில் வருமானம் உத்தியோகம் ஆகிய மூன்றிலும் அவமானத்தை தரும், மூத்த அதிகாரிகளால் மன கஷ்டத்தை உண்டாக்கும் ; தொழிலில் தனக்கு கீழே வேலை பார்க்கும் வேலையாட்களின் செயல்பாடுகள் ஜாதகரை எரிச்சலூட்டும். #padmahazan பொறுப்புகள் அல்லது அதிகாரம் மேலே உயர உயர ஜாதகர் நிம்மதி இழப்பார். பொறுமை சோதிக்கும். அரசு அரசியல் உயர் பதவி ஏமாற்றம் விரோதம் ஏற்படும். 

⚡️வயதான காலத்தில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ ஆரோக்கிய குறைபாட்டை காட்டும். இதயம் மூளை தண்டுவடம் மூட்டு எலும்பு வலது கண் சார்ந்த வயோதிக பாதிப்பில் வலி வேதனை ஏற்படுத்தும். மருத்துவ செலவு படுக்கையில் ஓய்வு எடுப்பது மாதிரியான சூழலுக்கு வைத்து இருக்கும். தன் மகன் தனக்கு கட்டுபடாத வகையில் வளர்க்கும் சூழலுக்கு பின்னாளில் ஜாதகர் இருப்பார்.  

⚡️சூரியன் சனி இணைவில் சுக்ரன் புதன் குரு இணைவது , #padmahazan அல்லது குரு சந்திரன் போன்ற சுப கிரகத்தின் பார்வை தொடர்பில் சனி மற்றும் சூரியன் சனி இருக்கும் போது இவை பலன் மாறுபடும் அல்லது குறைவாக வெளிபடும். 

⚡️ஏதாவது ஓர் சுப கிரகம் சூரியனையும் சனியையும் கெடுபலனை தராதபடி இணைந்து பார்த்து பாதிப்பை குறைக்க வேண்டும். 

⚡️ மேலே சொன்ன எல்லா பலனும் ஒருவருக்கு நடக்காது , வயதிற்கு ஏற்ப சனி சூரிய தசா வரும் நிலை ஏற்ப இதில் பாதிப்பை காட்டும். கூடுதலாக ஆதிபத்திய கிரகத்தின் வலுவை கணக்கில் கொள்ள வேண்டும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Monday, October 14, 2024

12ல் சனி நின்ற பலன்கள்

🍁 12ல் சனி நின்ற பலன்கள் 🍁 #hazan

⚡️லக்னத்திற்கு 12 பாவகம் , அயன சயன போகம் நஷ்டம் விரையம் இழப்பு சிறைபடுதல் மருத்துவமனை சிகிச்சை குறிக்கும் ஸ்தானம். 

⚡️இந்த 12 வீட்டில் சனி நின்றால் பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்...

⚡️சனி மட்டும் தனித்து வேறெந்த கிரக பார்வை கூட இல்லாமல் 12 வீட்டில் இருப்பது நன்மை . ஜாதகர் செலவுகளை குறைத்து கொள்வார் , தேவையற்ற செலவுகளை செய்ய தயங்குவார்கள், குறைவாக தூங்கி அதிகபடியாக உழைக்கும் சம்பாதிக்கும் குணத்தை ஜாதகர் பெறுவார் , #padmahazan தூர தேச வாழ்வை விரும்பாமல் சொந்த ஊரில் அலைந்து திரிந்து தொழில் செய்ய ஆசைபடுவார்கள். வேலை செல்லும் நிலையில் வேலையில் நிம்மதியோ அங்கீகாரமோ கிடைக்காது. இவர்கள் வேலை ஆட்களை வைத்து சிறிய அளவிலான தொழில்களை செய்ய விரும்புபவர்கள், பத்தாம் அதிபதி வலுத்தால் கூடுதலாக தொழில் மேன்மை தரும். 

⚡️ 12 மிட சனி மீது குரு சுக்ர பௌர்ணமி சந் பார்வை குரு சுக்ர பௌர்ணமி சந் இணைவு ஏற்படும் போது நற்பலன்கள் மேலோங்கி தூர தேச வாழ்வை விரும்பி , வளைகுடா நாடுகள் கத்தார் அரேபியா ஏமன் ஈரான் மாதிரியான அரபு நாடுகளுக்கும் நைஜீரியா கானா உகாண்டா மாதிரியான ஆப்பிரிக்க நாடுகளுக்கு சனி கொண்டு செல்வார். சிலரை வெளி மாநிலம் நகர்த்துவார்.

⚡️தூர தேசத்தில் சொந்த தொழில் செய்வது , வேலையாட்களை வெளி நாடுகளுக்கு கொண்டு சென்று விடும் ஏஜென்ஷி , hiring department, தன் பொருட்களை குறிப்பாக மெஷினரி , #padmahazan இயந்திரம், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது , கனரக லாரி , மண் அள்ளும் இயந்திரம் போன்ற வாகனங்களில் இரவு பகல் பார்க்காமல் பணம் சம்பாதிக்கும் பலனை சனி தருவார்.

⚡️சனிக்கு சூரியன் செவ்வாய் பார்வை இணைவும் ராகு இணைவும் வர கூடாது. பலன் எல்லாம் ஜாதகரை போட்டு வாட்டும் , கணவன் மனைவி இடையே பரஸ்பர நல்ல உறவை பாதிப்பார் , தேவையற்ற செலவுகளால் பணத்தை இழப்பார் ஜாதகர் , மருத்துவ செலவு அல்லது வழக்குகளால் பண இழப்பை ஏற்படுத்துவார் சனி. மிக கடுமையான நோய் பாதிப்பால் தூக்கமும் பாதிக்கும். ( வயதிற்கு ஏற்ப பாதிப்பை தசா நடத்தும் சனி தருவார் ) வழக்கில் தோற்று சிறை செல்வதை குறிப்பார். 

⚡️ தொழில் நஷ்டம் அல்லது முன்னேற்றம் இல்லாத சிக்கலில் போய் மாட்டி கொள்வார்கள். தொழில் வருமானம் சார்ந்த சவால்களை சனி ஏற்படுத்துவார். ( சனி தசாவில் இவை நடைபெறும் )  

⚡️12 ல் மறையும் சனி நட்பு ஆட்சி உச்சமாக இருப்பது நல்லது, பகை நீசம் மறைவது நல்லது கிடையாது. 

⚡️6 அதிபதியாகி சிம்ம மற்றும் கன்னி லக்னத்திற்கு 12ல் சனி இருப்பது தசாவில் முதல் 10 வருடம் நன்மை தராது. #padmahazan 

⚡️ மேலே சொன்ன எல்லா நிலைகளிலும் லக்னாதிபதி வலு மற்றும் 5 9 திரிகோண வலு ஏற்ப ஒருவருக்கு பலன் நடக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Friday, October 11, 2024

ராகு தரும் ஏமாற்றும் நிலை ஏமாறும் நிலை

🍁 ராகு 🍁 #hazan

⚡️ராகு என்றாலே ஏமாற்றுகாரன் பித்தலாட்டம் மற்றும் நிபுணத்துவம் என்று அர்த்தம். ராகு நின்ற பாவகம் ரீதியாக ஜாதகர் ஒன்று ஏமாற்றுவார் அல்லது ஏமாறுவார். 

⚡️ஒருவரை ஏமாற்றி மற்றவர்களிடம் தான் ஏமாறுவது ராகுதான் குறிப்பார். 

⚡️தாய் தந்தை ஏமாற்றி விட்டு ஒருவனை திருமணம் செய்து கொண்டு அவனிடம் ஏமாந்து போவது ராகு தரும் பலன்தான்.

⚡️செய்யும் தொழிலில் முறைகேடாக வாடிக்கையாளர் கூட்டாளி ஏமாற்றி பணம் சம்பாதித்தாலும் குறுகிய காலத்தில் தொழில் மூட வைப்பதும் ராகு தரும் பலன்தான். 

⚡️ஏமாற்ற போறீங்களா..? ஏமார்ந்து போக போறீங்களா..? #padmahazan ராகு நின்ற ராசி மற்றும் லக்னம் லக்னாதிபதி நிலை ஏற்ப தெரிந்துவிடும். 

⚡️ஒர் துறையில் நிபுணத்துவம் பெறுவதையும் ராகுதான் குறிக்கும். பிராடு தனமாக செயல்படுவதையும் ராகுதான் குறிக்கும். 

⚡️நிபுணராக மாறினால் ஊர் போற்றும் நாலு பேர் மதிப்பாங்க நல்ல புகழை தரும் ராகு. 

⚡️பிராடு மாறினால் நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க கெட்ட பெயர் வரும் கடைசியில் தற்*லை கூட செய்ய தூண்டும் ராகு.

⚡️ ராகுவால் உண்டாகும் பாதிப்பை துர்க்கை அம்மன் மற்றும் காளஹஸ்தி வழிபாடு குறைக்கும் .

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Thursday, October 10, 2024

ஜாதகர் மீது சூரியன் தரும் ஆதிக்க பலன்கள்

🍁 ஜாதகர் மீது சூரியன் தரும் ஆதிக்க பலன்கள் 🍁 #hazan 

⚡️காரகத்துவ ரீதியாக லக்னத்தை வலுபடுத்துபவர் சூரியன். 

⚡️ஓர் ஜாதகத்தில் லக்னாதிபதி இணையாக சூரியன் ஜாதகர் மீது தன் ஆளுமை செலுத்துவார். ஜாதகத்தில் சூரியன் கெட்டு போக கூடாது. பலம் இழக்க கூடாது. 

⚡️சூரியன் ~ வைராக்கியமும் , தீராத கோபமும் , அதோடு விடா முயற்சி , ஆளுமை திறன் , என்னால் முடியும் அப்படிங்கிற தன்னம்பிக்கை ரொம்ப நேர்மை குணம் கொடுக்க கூடிய கிரகம் சூரியன். பெரிய பெரிய குறிக்கோள் உருவாக்கி கொண்டு அதை நோக்கிய வாழ்க்கை பயணத்தை தருபவர் சூரியன். #padmahazan எதிலும் ஈகோ பார்ப்பது , ஆணவம் கர்வம் கொள்வது , தன்னை பலமான நபராக நம்புவது போன்ற சில குண கேடும் சூரியன் தருவார். 

⚡️ தன்னை தானே ஜாதகர் எப்படி நினைக்கிறார், தான் எப்படி மாற வேண்டும் எப்படிபட்ட அந்தஸ்து கௌரவத்தில் இருக்க வேண்டும் என்பது மாதிரியான சுய கௌரவம் முன்னேற்றம் தருபவர் சூரியன். 

⚡️ வேலை , தொழில் , குடும்பம் , நண்பர்கள் , உறவினர் , தெரு , ஊர் , நாடு அளவிலான தன்னை ஆளுமையாக அதிகார ஆதிக்கமுள்ள நபராக ஒருவரை வைத்து கொள்ள சூரியன் தயவு தேவை. 

⚡️தீராத கோபம் , வைராக்கிய கோபம் , பல வருடம் கழித்தும் பகையை மறக்காத கோபத்தை காட்டும் கிரகம். கோபமும் பகையையும் தீர்க்காத கிரகம். மன்னிப்பு கேட்டால் மட்டுமே விடும் , #padmahazan சமாதானம் பேசும் போதும் சுய கௌரவம் , தன் மானம் பார்க்கும் கிரகம் சூரியன். 

⚡️சூரியன் கெட்டால் , உங்களை யார் என்றே உங்களுக்கு தெரியாது , உங்களுக்கு என்ன திறமை உள்ளது என்று தெரிந்து கொள்ள முடியாது, பிறருக்கு பயந்து பயந்து வாழ வேண்டி இருக்கும் , பிறருக்கு ஈடு இணையாக நேருக்கு நேராக நின்று பேச பயம் வரும் , நேர் நேராக கண்ணை பார்த்து பேச தயங்கும் சுபாவம் வந்து விடும், பிறரிடம் இருந்து உரிய மரியாதை வராது , நற்பெயர் புகழ் உண்டாகாது , பிறர் உங்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் ஆளுமை உங்கள் வாழ்க்கை ஊசல் குண்டு போல நிலையாக இல்லாமல் மற்றவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஆடி கொண்டு இருப்பீர்கள்.

⚡️ஓர் ஜாதகத்தை பலன் எடுக்கும் போதும், #padmahazan பலன் சொல்லும் போதும் சூரியன் எங்கே உள்ளது எப்படிபட்ட வலுவில் உள்ளது என்பதை 100% கண்டிப்பாக பார்க்க வேண்டும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...