Wednesday, September 25, 2024

3ல் சூரியன் செவ்வாய் பலன்கள்

🍁 3 ல் பாவர்கள் சூரியன் & செவ்வாய் 🍁 #hazan 

⚡️8 பாவகம் எப்படி சனிக்கு  ஆயுளை நீட்டிக்கும் அமைப்பாக சொல்லபட்ட நிலையில் , அதே போன்ற சில கிரகத்திற்கு சில பாவகங்கள் மிகவும் ஏற்ற அமைப்பில் இருக்கும். அதில் 2 அமைப்பை இந்த பதிவில் காண்போம். 

⚡️3 பாவகத்தில் சூரியன் ~ புகழ் கௌரவம் நற்பெயரை ஏற்படுத்தி தரும் , ஜாதகர் முயற்சி அனைத்தும் பெரிய குறிக்கோளை கொண்டு இருக்கும் , நீண்ட நிலையான புகழை தான் இருக்கும் துறையில் ஊரில் அலுவலகத்தில் தொழிலில் ஏற்படுத்தி கொள்வார்கள். #padmahazan இவர்கள் மறைவிற்கு பிறகும் அந்த புகழ் இருக்கும். 

பிறருக்கு உதவுவதை தன் மானமாக , பெருந்தன்மையாக நினைப்பார்கள். 

" அவரா..? அவர் அப்படி ஓர் விஷயத்தை அப்போதே செய்தவர் " மாதிரியான முன்னோடியாக ஜாதகரை வைக்கும் கிரக நிலை இது. 

⚡️3 பாவகத்தில் செவ்வாய் ~ வீரியம் தைரியம் சிறப்படையும் , எதிரிகளை அடக்கி வைக்கும் செயல்களில் இறங்குவார்கள், தடாலடியாக சில வண்டி வாகன சாகசம் செய்ய தூண்டும். #padmahazan  ஜல்லி கட்டு காளை அடங்கிவிடும் வீரம் இதுதான். காதல் காமம் எதிலும் அவசர தனம் காட்டுவார்கள் . உடல் எப்போதும் புத்துணர்வாக இருக்கும். 

எதற்கும் அஞ்சாத பயபடாத ,

" வா... நீயா..? நானா..?  " பாத்துடலாம் அப்படிங்கிற முரட்டு தனத்தை ஏற்படுத்தி தரும். 

⚡️சிலருக்கு இந்த மூன்றில் செவ்வாய் காரகோ பாவ நாஸ்தியாக சகோதர இழப்பை தரும். 

⚡️ மூன்றில் சூரியனோ செவ்வாயோ தனித்து இருப்பது நல்லது. நட்பு ஆட்சி உச்சமாக இருப்பது சிறப்பு. 

⚡️மூன்றில் உள்ள சூரியன் அல்லது செவ்வாய்க்கு சனி இணைவு பார்வை இருக்க கூடாது. ராகு கேது இணைவும் இருக்க கூடாது. பலனை மாற்றிவிடும். 

⚡️லக்னம் லக்னாதிபதி வலு ஏற்ப இதன் பலன் ஜாதகர் வாழ்வில் வெளிபடும். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

Thursday, September 12, 2024

பாக்கிய ஸ்தானம் முக்கியத்துவம்

🍁 பாக்கிய ஸ்தான முக்கியத்துவம் 🍁 #hazan 

⚡️இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி... ஓர் நல்ல நாள் , சுப காரியங்கள் , கடவுள் வழிபாடு , இனிப்புகள் , சாப்பாடுகள் , கோவில் வழிபாடுகள் கொஞ்சம் சந்தோசமாக இருக்கக்கூடிய நல்ல நாள். இதுதான் பாக்கியம். இதை சரியாக அனுபவிப்பதற்கு பாக்கியம் தேவை. 

⚡️காலை எழுந்து குளித்து , சாமிக்கு நாலு ஐந்து பழம் பூ இனிப்பு வைத்து தீப ஒளி ஏற்றி வழிபடும் கொடுப்பினை தான் பாக்கியம்.

⚡️பண்டிகை நல்ல நாள் மட்டும் கிடையாது, திருமணம், புத்திர பாக்கியம் , காது குத்து , புதுமனை புகுவிழா #padmahazan , வளைகாப்பு , கோவில் செல்வது என எந்த சுப நிகழ்வுகள் சீரும் சிறப்புமாக ஒருவருக்கு நடக்க அவருக்கோ அவரது குடும்பத்தில் முக்கியமான ஒருவருக்கோ பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். 

⚡️பாக்கிய ஸ்தானம் வலுபெற்றவர்கள் மேலே சொன்னதை அப்படியே பின்பற்றி வருவீர்கள் , ஒவ்வொரு பண்டிகை நாளும் திருவிழா போல கொண்டாடுவார்கள். 

⚡️பாக்கிய ஸ்தானம் கெட்டு இருந்தால் கூட , உங்கள் கணவரோ மனைவியோ அல்லது தாய் தந்தை பிள்ளைகளுக்கு பாக்கியம் வலுபெற்றால் அவர்களது அமைப்பில் நீங்களும் இதை அனுபவித்து கொண்டு இருப்பீர்கள்.

⚡️ கூடுதலாக குரு சுக்ரன் வளர்பிறை சந்திரன் பாக்கிய நிலைகளோடு அதிபதியோடு தொடர்பு கொள்ளும் போது சந்தோஷத்தில் மூழ்கி விடுவீர்கள்.

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

தூர தேச வாழ்க்கை - 12 பாவகம்

🍁 தூர தேச வாழ்க்கை - 12 பாவகம் 🍁 #hazan 

⚡️12 பாவகம் வெளிநாடு தூர தேச வாழ்வை குறிக்கும் பாவகம் 12 பாவகம் குரு சுக்ர வளர்பிறை சந்திர புதன் போன்ற சுப கிரகத்தால் வலுக்கும் போது வெளிநாடு வெளிமாநிலத்தில் ஆடம்பரமான சொகுசு வாழ்வு நல்ல வருமானம் சந்தோஷமாக வாழ்வை அனுபவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். 

⚡️ருமேனியா ஐரோப்பிய நாட்டில் பணியில் இருக்கும் மேஷ லக்ன காரருக்கு 12ல் உச்ச சுக்ரன். #padmahazan பத்தில் சனி என்ஜினீயராக அங்கே உள்ளார். 

⚡️கனடா மாதிரியான குளிர் பிரதேச வாழ்வை விரும்பி ஏற்று கொள்ளும் பெண் ஒருவருக்கு கும்ப லக்னத்திற்கு 6ல் உச்சமான கடகத்தில் குருவோடு ஆட்சி பெற்ற சந் இணைந்து 12 பார்க்கிறது.

⚡️மேஷ லக்னத்திற்கு 12 பாவகத்தை 6ல் உச்சபுதனும் நீச சுக்ரனும் பார்த்த ஒருவர் வட மாநிலமான ஒரிஷாவில் மேனேஜராக உள்ளார்.

⚡️ரிஷப லக்ன 12 பாவகத்தை 8 குரு 6 சுக்ரன் இருந்து பார்த்த ஒருவர் மஹாராஷ்டிரத்தில் பணியில் உள்ளார். 

⚡️கடக லக்ன 12ல் புதன் ஆட்சி கூடவே சுக்ரன். ஜப்பான் போக முடியுமா..? #padmahazan என்பதே அவரது கேள்வி கண்டிப்பாக ஓர்நாள் ஜப்பான் செல்வார். 

⚡️12 பாவகம் அதிகபடியான குரு சுக்ர வளர் சந் புதன் இருப்பது பார்ப்பது தூர தேசத்திற்கு நகர்த்தும். அங்கே நல்ல வருமானமும் நிம்மதியை தரும். 

⚡️ இது போன்ற அமைப்பில் 12 பாவகம் வலுவாக இருந்து , சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மகரத்தில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்துவது , அல்லது ராகு கேது தசா வருவது , ராகு கேது இணைந்த தசா வருவது போன்ற நிலையில் இடமாற்றத்தை தரும்.

⚡️ லக்னாதிபதி வலு , தசா ஏற்ப வாழ்க்கை மாற்றம் தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...