🍁 3 ல் பாவர்கள் சூரியன் & செவ்வாய் 🍁 #hazan
⚡️8 பாவகம் எப்படி சனிக்கு ஆயுளை நீட்டிக்கும் அமைப்பாக சொல்லபட்ட நிலையில் , அதே போன்ற சில கிரகத்திற்கு சில பாவகங்கள் மிகவும் ஏற்ற அமைப்பில் இருக்கும். அதில் 2 அமைப்பை இந்த பதிவில் காண்போம்.
⚡️3 பாவகத்தில் சூரியன் ~ புகழ் கௌரவம் நற்பெயரை ஏற்படுத்தி தரும் , ஜாதகர் முயற்சி அனைத்தும் பெரிய குறிக்கோளை கொண்டு இருக்கும் , நீண்ட நிலையான புகழை தான் இருக்கும் துறையில் ஊரில் அலுவலகத்தில் தொழிலில் ஏற்படுத்தி கொள்வார்கள். #padmahazan இவர்கள் மறைவிற்கு பிறகும் அந்த புகழ் இருக்கும்.
பிறருக்கு உதவுவதை தன் மானமாக , பெருந்தன்மையாக நினைப்பார்கள்.
" அவரா..? அவர் அப்படி ஓர் விஷயத்தை அப்போதே செய்தவர் " மாதிரியான முன்னோடியாக ஜாதகரை வைக்கும் கிரக நிலை இது.
⚡️3 பாவகத்தில் செவ்வாய் ~ வீரியம் தைரியம் சிறப்படையும் , எதிரிகளை அடக்கி வைக்கும் செயல்களில் இறங்குவார்கள், தடாலடியாக சில வண்டி வாகன சாகசம் செய்ய தூண்டும். #padmahazan ஜல்லி கட்டு காளை அடங்கிவிடும் வீரம் இதுதான். காதல் காமம் எதிலும் அவசர தனம் காட்டுவார்கள் . உடல் எப்போதும் புத்துணர்வாக இருக்கும்.
எதற்கும் அஞ்சாத பயபடாத ,
" வா... நீயா..? நானா..? " பாத்துடலாம் அப்படிங்கிற முரட்டு தனத்தை ஏற்படுத்தி தரும்.
⚡️சிலருக்கு இந்த மூன்றில் செவ்வாய் காரகோ பாவ நாஸ்தியாக சகோதர இழப்பை தரும்.
⚡️ மூன்றில் சூரியனோ செவ்வாயோ தனித்து இருப்பது நல்லது. நட்பு ஆட்சி உச்சமாக இருப்பது சிறப்பு.
⚡️மூன்றில் உள்ள சூரியன் அல்லது செவ்வாய்க்கு சனி இணைவு பார்வை இருக்க கூடாது. ராகு கேது இணைவும் இருக்க கூடாது. பலனை மாற்றிவிடும்.
⚡️லக்னம் லக்னாதிபதி வலு ஏற்ப இதன் பலன் ஜாதகர் வாழ்வில் வெளிபடும்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment