🍁 தூர தேச வாழ்க்கை - 12 பாவகம் 🍁 #hazan
⚡️12 பாவகம் வெளிநாடு தூர தேச வாழ்வை குறிக்கும் பாவகம் 12 பாவகம் குரு சுக்ர வளர்பிறை சந்திர புதன் போன்ற சுப கிரகத்தால் வலுக்கும் போது வெளிநாடு வெளிமாநிலத்தில் ஆடம்பரமான சொகுசு வாழ்வு நல்ல வருமானம் சந்தோஷமாக வாழ்வை அனுபவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.
⚡️ருமேனியா ஐரோப்பிய நாட்டில் பணியில் இருக்கும் மேஷ லக்ன காரருக்கு 12ல் உச்ச சுக்ரன். #padmahazan பத்தில் சனி என்ஜினீயராக அங்கே உள்ளார்.
⚡️கனடா மாதிரியான குளிர் பிரதேச வாழ்வை விரும்பி ஏற்று கொள்ளும் பெண் ஒருவருக்கு கும்ப லக்னத்திற்கு 6ல் உச்சமான கடகத்தில் குருவோடு ஆட்சி பெற்ற சந் இணைந்து 12 பார்க்கிறது.
⚡️மேஷ லக்னத்திற்கு 12 பாவகத்தை 6ல் உச்சபுதனும் நீச சுக்ரனும் பார்த்த ஒருவர் வட மாநிலமான ஒரிஷாவில் மேனேஜராக உள்ளார்.
⚡️ரிஷப லக்ன 12 பாவகத்தை 8 குரு 6 சுக்ரன் இருந்து பார்த்த ஒருவர் மஹாராஷ்டிரத்தில் பணியில் உள்ளார்.
⚡️கடக லக்ன 12ல் புதன் ஆட்சி கூடவே சுக்ரன். ஜப்பான் போக முடியுமா..? #padmahazan என்பதே அவரது கேள்வி கண்டிப்பாக ஓர்நாள் ஜப்பான் செல்வார்.
⚡️12 பாவகம் அதிகபடியான குரு சுக்ர வளர் சந் புதன் இருப்பது பார்ப்பது தூர தேசத்திற்கு நகர்த்தும். அங்கே நல்ல வருமானமும் நிம்மதியை தரும்.
⚡️ இது போன்ற அமைப்பில் 12 பாவகம் வலுவாக இருந்து , சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மகரத்தில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்துவது , அல்லது ராகு கேது தசா வருவது , ராகு கேது இணைந்த தசா வருவது போன்ற நிலையில் இடமாற்றத்தை தரும்.
⚡️ லக்னாதிபதி வலு , தசா ஏற்ப வாழ்க்கை மாற்றம் தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment