🍁 மணவாழ்வில் புனர்பு தோசம் தரும் தாக்கம் 🍁
சந்திரன் சனி இணைவு பெறுவது, சந்திரன் மீது சனியின் பார்வை இருப்பது போன்றவை புனர்பு தோசம் ஏற்படுத்துகிறது.
அதாவது சந்திரன் சனியால் பாதிக்கபடுவதை இந்த புனர்பு தோசம் காட்டுகிறது.
மனதை குறிக்கும் சந்திரனும் , கர்மத்தை குறிக்கும் சனியும் தொடர்பு கொள்ளும் நிலையில் அந்த கிரக அமைப்பை ஜாதகருக்கு மனம் சார்ந்த பாதிப்பை சனி ஏற்படுத்துகிறார்.
கணவன் மனைவி இடையே உண்டாகும் புரிதல் குறைவு அல்லது திடீர் கருத்து வேறுபாடு, நம்பிக்கை இல்லாத தேவையற்ற வீண் சண்டை சந்தேகங்களை இந்த புனர்பு தோசம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
மனதில் தேவையற்ற இறுக்கமான சூழலை ஏற்படுத்தி குறிப்பிட்ட சில காலம் ஒரு விதமான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இது அப்படியே மணவாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள சிறு சிறு பாதிப்பை கூட " அது ஏன் அப்படி சொன்னாங்க..? " " இதை ஏன் இப்படி நடந்தது..? " என்ற கோணத்தில் கடந்த கால நிகழ்வை போட்டு தனக்குள்ளே கேள்விகளை அடுக்கி கொள்வார்கள். அதுவே நாள்பட்ட மன அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
கணவன் மனைவி இருவருக்குமே இந்த புனர்பு அமைப்பில் சனி சந்திரன் அமைந்துவிட்டால் குடும்ப வாழ்வில் அதிகபடியாக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், மனதை நிலைபடுத்தி தெளிவான சிந்தனையை ஏற்படுத்தி கொள்ளும் பக்குவத்தை தேட வேண்டும்.
வலுவான புனர்பு தோசம் ஒருவருக்கு திருமண தடை அல்லது திருமண வாழ்வில் நிம்மதியற்ற சூழலை உருவாக்கி கொடுக்கிறது.
புனர்பு தோசம் கொண்டவர்கள் வயதான முதியவருக்கு சேவை செய்வது, உதவுவது, சாப்பாடு பரிமாறுவது, #padmahazan
வேலையாட்களுக்கு உணவு பொருட்களை தானமாக கொடுப்பது,
கணவனும் மனைவியும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் போவது, அண்ணாமலையாரை வணங்குவது போன்றவை பாதிப்பை குறைக்கும்.
சிறு தூர பயணங்கள் மேற்கொள்வது மன அமைதியை பெற இயலும்.
புனர்பு தோசமுள்ள சந்திரன் மற்றும் சனியை குரு பகவான் பார்ப்பது மற்றும் குரு இணையும் அமைப்பில் தோசம் பெரிதாக பாதிக்காது.
முழு பௌர்ணமி திதியை நெருங்கும் சந்திரன் பெரிதாக புனர்பு அமைப்பில் பாதிக்கபட மாட்டார். பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
புனர்பு தோசமுள்ள சந்திரன் கூடுதலாக ராகு அல்லது கேது இணைவை பெற்றுவிடும் போது அதன் பாதிப்பு கூடுதலாக இருக்கும். இவர்கள் முழுமையாக ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்தி கொண்டு கடவுள் மீதான பக்தியை அதிகபடியாக ஏற்படுத்தி கொள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment