Sunday, February 19, 2023

மகர லக்னத்திற்கு புதன் சுக்ரன் இணைவு

🍁 மகர லக்னத்திற்கு புதன் சுக்ரன் இணைவு 🍁 #hazan

சனியை லக்ன அதிபதியாக மகர லக்னத்திற்கு , சுக்ரனும் புதனும் யோகராகவும் வருவார்கள்.

🌟 யோகாதிபதி சுக்ரன் 🌟

சுக்ரன் லக்னத்திற்கு 5 என்னும் அதிஷ்டம், பூர்வ புண்ணியம், குலதெய்வம் மற்றும் பாட்டன் வழி மேன்மை மற்றும் 10 அதிபதியாகி நீடித்த வருமானம் பதவி தொழில் தரும் இரு சுப கேந்திர கோண ஆதிபத்தியங்களை பெற்ற முழு முதற் யோக கிரகமாக சுக்ரன் இருப்பார். 

5 மற்றும் 10 ஆதிபத்தியங்கள் பெறும் சுக்ர கிரகம் 12 லக்னங்களிலேயே அதிகபடியான சுப பலனை மகர லக்னத்திற்கு மட்டுமே தருவார்.
#padmahazan 

🌟 யோகாதிபதி புதன் 🌟

மகர லக்னத்திற்கு புதன் ஒன்பதுக்குடைய தந்தை ஸ்தான அதிபதியும் , வாழ்வில் எண்ணியதை அடையும் பாக்கிய நிலையையும் தரும் கிரகம் ஆக வருவார்.

மகர லக்னத்திற்கு புதன் கடன் நோய் எதிரி சார்ந்த ஆகாத இடையூறுகளை தரும் ஆறாம் அதிபதியும் ஆவதால் ஒரு பக்கம் சிறு சிறு கஷ்டங்களையும் அதே பாக்கியாதிபதி புதன் தருவார்.

🌟 புதன் + சுக்ரன் இணைவு 🌟

மகர லக்னத்திற்கு 2 9 10 11 இடங்களில் இந்த இணைவு ஏற்படுவது ஜாதகருக்கு சீரான பண புழக்கத்தை , நீடித்த வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள்.

தர்மகர்மாதிபதியான புதனும் சுக்ரனும் இணைவது இவர்கள் இருக்கும் பாவக ரீதியிலான சுப பலனை ஜாதகர் எளிதாக பெரும் முயற்சிகள் இன்றி அடைந்து விடுவார்கள்.

லக்னத்தில் உண்டாகும் புத சுக்ர இணைவு ஜாதகரை பிறக்கும் போதே நல்ல செல்வ செழிப்பான குடும்ப பிண்ணனி பிறந்து வயதிற்கு ஏற்ற நற்காரியங்களை சுப நிகழ்வுகளை அனுபவிக்கும் லக்ன வலுவை தருவார்கள். 

4ல் இடத்தில் உண்டாகும் புதன் சுக்ரன் இணைவு நல்ல ஆடம்பரமான வீடு வாகன சொகுசு வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பார்கள். 

5ல் உண்டாகும் புதன் சுக்ரன் இணைவு பாரம்பரியமாக குடும்ப பெயரை காக்கும் குழந்தைகள் ஏற்படுத்தி கொடுக்கும். பெண் வாரிசுகளால் வாழ்வில் சிறப்புகளை பெறுவார்கள். #padmahazan 

6 8 இடங்களில் புதன் சுக்ர இணைவு மகர லக்னத்திற்கு சிறப்பு தராது. பூர்வீக தந்தை வழி சொத்து , மனைவி , தாய்மாமன் சொந்த பந்தயங்களில் உண்டாகும் மன அழுத்தம் நிம்மதி இழப்பை உண்டாகும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🌟 சூரியன் இணைவு கூடவே...! கூடாது...!! 🌟

சூரியனும் புதனும் சுக்ரனும் முக்கூட்டு கிரகங்களாக இருப்பதால் பெரும்பாலான நிலையில் சூரியனுடன் இவர்கள் இணைவை பெறுவார்கள்.

மகர லக்னத்தின் அட்டமாதிபதி ஆகும் எட்டாம் அதிபதி சூரியன் இணைவை புதனும் சுக்ரனும் பெற்றால், மேலே சொன்ன பலன்களோடு சிறு சிறு மன அழுத்தம், அவபெயர் , தொழில் வழி திடீர் சறுக்கலை ஏற்படுத்தி போகும்.

அட்டமாதிபதியான சூரியன் , ராகு கேது , இணைவை பெறுவதும் , லக்னாதிபதி ஆகவே இருந்தாலும் சனியின் பார்வையில் இவர்கள் இருப்பதும் யோகத்தை குறைக்கும்.

மகர லக்னத்தில் பிறந்து 1 2 3 4 5 9 10 11 இடங்களில் பிற பாவ கிரக தொடர்பு இன்றி உண்டாகும் புதன் சுக்ரன் இணைவும் , இவர்களது புதன் மற்றும் சுக்ர தசா ஜாதகர்களுக்கு பொற்காலமாக அமைந்து விடும். #padmahazan 

புதன் சுக்ரன் இணைவு இருப்பினும் இவர்களது தசா வராத வரை பெரிய முன்னேற்றத்தை இந்த இரு கிரகங்களால் ஏற்படுத்தி கொடுக்க இயலாது. மாறாக இவர்களது நட்சத்திரம் பெற்ற கிரக தசா இவர்களது பாவக இருப்பிற்கு ஏற்ப சுப பலனை தரும்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...