Monday, February 27, 2023

புதன் தரும் தொழில்கள்

🍁 புதன் தரும் தொழில்கள் 🍁 #hazan 

புத்தி காரகனான புதன் ஒருவருக்கு 2 10 இடங்களோடு தொடர்பு கொள்ளும் போது , அல்லது 2 10 அதிபதி இணைவில் கேந்திர கோணமாக சுப அமைப்பில் உள்ள நிலையில் கீழே கொடுக்கபட்டுள்ள துறையில் வருமானம் அமைத்து கொள்வார்கள்.

1). IT துறை : 

கணினி சார்ந்த software, coding, programming, networking , data analysis 

2). Electric gadget service : 

கம்ப்யூட்டர் , மொபைல் , டேப்லேட் போன்ற communication தொடர்பு கொண்ட பொருட்களை விற்பது அல்லது பழுது நீக்கும் தொழில்

3). Computer centre : 

Ticket booking, documentation, online application , xerox , typing works.

4). banking 

5). Office assistant 

6). Accounting auditing income tax , கணக்கு காட்டும் பணி

7). Commission based தரகு தொழில் 

8). தபால் துறை பணியாற்றுவது , 

9). கூரியர் சேவை நடத்துவது , 

10). Clerk வேலை, 

11). சர்வேயர் 

12). சில்லறை வர்த்தக வியாபாரி 

13). புத்தக விற்பனை எழுது பொருட்கள் விற்பனை

14). தினசரி நாளிதல் போன்ற பத்திரிக்கை துறை 

15). அச்சு ஊடகம் #padmahazan 

16). பணம் அச்சடிக்கும் துறை

17). TNPL 

18). பேப்பர் மில் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

19). திரைபட வசனம் எழுதுவது

20). திரைக்கதை எழுதுவது

21). நகைச்சுவையாளர். Stand up comedian 

22). சிற்ப கலைஞர், 

23). கதை நாவல் கவிதை எழுத்தாளர்கள்

24). Dubbing artist, மிமிக்ரி 

25). விளம்பரம் தயாரிப்பது

26). ஜோதிடம் 

புதனின் வலு ஏற்ப மேலே சொன்ன ஏதோ ஒன்றில் புதன் 2 10 இடங்களோடு தொடர்பு கொண்டு புதன் வலுவான அமைப்பில் இருக்கும் போது ஒருவருக்கு இவற்றின் வழியே தொழிலையோ வேலையோ கொடுத்து வருமானத்தை தரும். 

அதாவது புதன் 

நட்பு வீட்டில் இருப்பது

ஆட்சி உச்சம் பெறுவது 

நீசபங்க ராஜயோக அமைப்பில் 

லக்ன ராசிக்கு 2 10 இடங்களை தொடர்பு கொள்வது அல்லது 2 10 அதிபதிகளோடு புதன் இணைவது மேலே கொடுக்கபட்டுள்ள வழிகளில் வருமானத்தை தரும். #padmahazan 

புதனோடு இணையும் மற்ற கிரகம் பொறுத்து இதில் எது அமையும் என்று காணலாம். 

புதன் சுக்ரன் _ மீடியா ஜவுளி துறை சினிமா

புத சனி _ வியாபாரம் வர்த்தகம் சிற்பி 

புத குரு _ வங்கி துறை

புத ராகு _ programming 

புத செவ் _ சர்வேயர் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Wednesday, February 22, 2023

மணவாழ்வில் புனர்பு தோசம் தரும் தாக்கம்

🍁 மணவாழ்வில் புனர்பு தோசம் தரும் தாக்கம் 🍁 

சந்திரன் சனி இணைவு பெறுவது, சந்திரன் மீது சனியின் பார்வை இருப்பது போன்றவை புனர்பு தோசம் ஏற்படுத்துகிறது. 

அதாவது சந்திரன் சனியால் பாதிக்கபடுவதை இந்த புனர்பு தோசம் காட்டுகிறது. 

மனதை குறிக்கும் சந்திரனும் , கர்மத்தை குறிக்கும் சனியும் தொடர்பு கொள்ளும் நிலையில் அந்த கிரக அமைப்பை ஜாதகருக்கு மனம் சார்ந்த பாதிப்பை சனி ஏற்படுத்துகிறார். 

கணவன் மனைவி இடையே உண்டாகும் புரிதல் குறைவு அல்லது திடீர் கருத்து வேறுபாடு, நம்பிக்கை இல்லாத தேவையற்ற வீண் சண்டை சந்தேகங்களை இந்த புனர்பு தோசம் ஏற்படுத்தி கொடுக்கிறது. 

மனதில் தேவையற்ற இறுக்கமான சூழலை ஏற்படுத்தி குறிப்பிட்ட சில காலம் ஒரு விதமான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இது அப்படியே மணவாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும். 

கணவன் மனைவிக்கு இடையே உள்ள சிறு சிறு பாதிப்பை கூட " அது ஏன் அப்படி சொன்னாங்க..? " " இதை ஏன் இப்படி நடந்தது..? " என்ற கோணத்தில் கடந்த கால நிகழ்வை போட்டு தனக்குள்ளே கேள்விகளை அடுக்கி கொள்வார்கள். அதுவே நாள்பட்ட மன அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. 

கணவன் மனைவி இருவருக்குமே இந்த புனர்பு அமைப்பில் சனி சந்திரன் அமைந்துவிட்டால் குடும்ப வாழ்வில் அதிகபடியாக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், மனதை நிலைபடுத்தி தெளிவான சிந்தனையை ஏற்படுத்தி கொள்ளும் பக்குவத்தை தேட வேண்டும். 

வலுவான புனர்பு தோசம் ஒருவருக்கு திருமண தடை அல்லது திருமண வாழ்வில் நிம்மதியற்ற சூழலை உருவாக்கி கொடுக்கிறது. 

புனர்பு தோசம் கொண்டவர்கள் வயதான முதியவருக்கு சேவை செய்வது, உதவுவது, சாப்பாடு பரிமாறுவது, #padmahazan 

வேலையாட்களுக்கு உணவு பொருட்களை தானமாக கொடுப்பது, 

கணவனும் மனைவியும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் போவது, அண்ணாமலையாரை வணங்குவது போன்றவை பாதிப்பை குறைக்கும். 

சிறு தூர பயணங்கள் மேற்கொள்வது மன அமைதியை பெற இயலும். 

புனர்பு தோசமுள்ள சந்திரன் மற்றும் சனியை  குரு பகவான் பார்ப்பது மற்றும் குரு இணையும் அமைப்பில் தோசம் பெரிதாக பாதிக்காது. 

முழு பௌர்ணமி திதியை நெருங்கும் சந்திரன் பெரிதாக புனர்பு அமைப்பில் பாதிக்கபட மாட்டார். பாதிப்பு குறைவாகவே இருக்கும். 

புனர்பு தோசமுள்ள சந்திரன் கூடுதலாக ராகு அல்லது கேது இணைவை பெற்றுவிடும் போது அதன் பாதிப்பு கூடுதலாக இருக்கும். இவர்கள் முழுமையாக ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்தி கொண்டு கடவுள் மீதான பக்தியை அதிகபடியாக ஏற்படுத்தி கொள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Sunday, February 19, 2023

மகர லக்னத்திற்கு புதன் சுக்ரன் இணைவு

🍁 மகர லக்னத்திற்கு புதன் சுக்ரன் இணைவு 🍁 #hazan

சனியை லக்ன அதிபதியாக மகர லக்னத்திற்கு , சுக்ரனும் புதனும் யோகராகவும் வருவார்கள்.

🌟 யோகாதிபதி சுக்ரன் 🌟

சுக்ரன் லக்னத்திற்கு 5 என்னும் அதிஷ்டம், பூர்வ புண்ணியம், குலதெய்வம் மற்றும் பாட்டன் வழி மேன்மை மற்றும் 10 அதிபதியாகி நீடித்த வருமானம் பதவி தொழில் தரும் இரு சுப கேந்திர கோண ஆதிபத்தியங்களை பெற்ற முழு முதற் யோக கிரகமாக சுக்ரன் இருப்பார். 

5 மற்றும் 10 ஆதிபத்தியங்கள் பெறும் சுக்ர கிரகம் 12 லக்னங்களிலேயே அதிகபடியான சுப பலனை மகர லக்னத்திற்கு மட்டுமே தருவார்.
#padmahazan 

🌟 யோகாதிபதி புதன் 🌟

மகர லக்னத்திற்கு புதன் ஒன்பதுக்குடைய தந்தை ஸ்தான அதிபதியும் , வாழ்வில் எண்ணியதை அடையும் பாக்கிய நிலையையும் தரும் கிரகம் ஆக வருவார்.

மகர லக்னத்திற்கு புதன் கடன் நோய் எதிரி சார்ந்த ஆகாத இடையூறுகளை தரும் ஆறாம் அதிபதியும் ஆவதால் ஒரு பக்கம் சிறு சிறு கஷ்டங்களையும் அதே பாக்கியாதிபதி புதன் தருவார்.

🌟 புதன் + சுக்ரன் இணைவு 🌟

மகர லக்னத்திற்கு 2 9 10 11 இடங்களில் இந்த இணைவு ஏற்படுவது ஜாதகருக்கு சீரான பண புழக்கத்தை , நீடித்த வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள்.

தர்மகர்மாதிபதியான புதனும் சுக்ரனும் இணைவது இவர்கள் இருக்கும் பாவக ரீதியிலான சுப பலனை ஜாதகர் எளிதாக பெரும் முயற்சிகள் இன்றி அடைந்து விடுவார்கள்.

லக்னத்தில் உண்டாகும் புத சுக்ர இணைவு ஜாதகரை பிறக்கும் போதே நல்ல செல்வ செழிப்பான குடும்ப பிண்ணனி பிறந்து வயதிற்கு ஏற்ற நற்காரியங்களை சுப நிகழ்வுகளை அனுபவிக்கும் லக்ன வலுவை தருவார்கள். 

4ல் இடத்தில் உண்டாகும் புதன் சுக்ரன் இணைவு நல்ல ஆடம்பரமான வீடு வாகன சொகுசு வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பார்கள். 

5ல் உண்டாகும் புதன் சுக்ரன் இணைவு பாரம்பரியமாக குடும்ப பெயரை காக்கும் குழந்தைகள் ஏற்படுத்தி கொடுக்கும். பெண் வாரிசுகளால் வாழ்வில் சிறப்புகளை பெறுவார்கள். #padmahazan 

6 8 இடங்களில் புதன் சுக்ர இணைவு மகர லக்னத்திற்கு சிறப்பு தராது. பூர்வீக தந்தை வழி சொத்து , மனைவி , தாய்மாமன் சொந்த பந்தயங்களில் உண்டாகும் மன அழுத்தம் நிம்மதி இழப்பை உண்டாகும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🌟 சூரியன் இணைவு கூடவே...! கூடாது...!! 🌟

சூரியனும் புதனும் சுக்ரனும் முக்கூட்டு கிரகங்களாக இருப்பதால் பெரும்பாலான நிலையில் சூரியனுடன் இவர்கள் இணைவை பெறுவார்கள்.

மகர லக்னத்தின் அட்டமாதிபதி ஆகும் எட்டாம் அதிபதி சூரியன் இணைவை புதனும் சுக்ரனும் பெற்றால், மேலே சொன்ன பலன்களோடு சிறு சிறு மன அழுத்தம், அவபெயர் , தொழில் வழி திடீர் சறுக்கலை ஏற்படுத்தி போகும்.

அட்டமாதிபதியான சூரியன் , ராகு கேது , இணைவை பெறுவதும் , லக்னாதிபதி ஆகவே இருந்தாலும் சனியின் பார்வையில் இவர்கள் இருப்பதும் யோகத்தை குறைக்கும்.

மகர லக்னத்தில் பிறந்து 1 2 3 4 5 9 10 11 இடங்களில் பிற பாவ கிரக தொடர்பு இன்றி உண்டாகும் புதன் சுக்ரன் இணைவும் , இவர்களது புதன் மற்றும் சுக்ர தசா ஜாதகர்களுக்கு பொற்காலமாக அமைந்து விடும். #padmahazan 

புதன் சுக்ரன் இணைவு இருப்பினும் இவர்களது தசா வராத வரை பெரிய முன்னேற்றத்தை இந்த இரு கிரகங்களால் ஏற்படுத்தி கொடுக்க இயலாது. மாறாக இவர்களது நட்சத்திரம் பெற்ற கிரக தசா இவர்களது பாவக இருப்பிற்கு ஏற்ப சுப பலனை தரும்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...