விருச்சிகம்
கால புருஷ அஷ்டம ராசி,
கடுமையான மறைவு ராசி,
சீறும் செவ்வாயின் ஸ்திர பெண் ராசி,
விருச்சிக ராசியின் இயல்பு கோபம் கொண்டது. ஆனால் நீர் ராசியாக அமைவதால் கோபத்தை நீர் ஊற்றி குளிர்விப்பதை போல குபீரென்று வரும் கோவத்தை டம்பள் தண்ணியை ஊற்றி தணித்து கொள்வதை போல நேரம் வரும் என்று காத்து இருக்கும் ராசி இருக்கும்.
பெண் ராசி என்பதால் திடீர் சீற்றத்தை, உணர்ச்சி வெளிபடுத்தலை விரும்பாத ராசி, இருங்க இருங்க point வரட்டும் என்பது போல காத்திருந்து நேரம் பார்த்து காட்டும். அன்பு காதல் பாசம் கோவம் காமம் அனைத்தையும் நேரம் காலம் பார்த்து வெளிபடுத்தும் ராசி. நல்லதோ கெட்டதோ எதையும் உடனே வெளிபடுத்தாமல் காலம் வரும் என்று காத்திருப்பதாலேயே இந்த ராசியின் உணர்வுகளின் தாக்கம் வெளிபடும் போது விளைவுகள் கடுமையாக நினைபபதை விட பெரிதாக வெளிபடுத்தும் ராசி.
பெண் தேளினை உருவமாக கொண்ட இந்த ராசி தேளின் சுபாவததை அதிகமாக வெளிபடுத்தும் , மறைந்து கொண்டு தன் இருக்கும் இடத்தை யாருக்கும் வி்ட்டு கொடுக்காமல் இருப்பதை போல நெருங்கிய இரத்த பந்தமோ நண்பர்களோ ஏன் வாழ்க்கை துணையோ எவரையும் எளிதில் நம்பாத ராசி, சுய பாதுகாப்பை அதிகமாக விரும்பும் ராசி. நாம் பாதுகாப்பாக உள்ளோமா..? என்று தன் இருக்கும் சூழலை நோட்டம் விட்டு கொண்டே உளவு பாரத்து கொண்டே இருக்கும் ராசி.
பாறை இடுக்கு, இருண்ட பாதாளம், பூமிக்கடியில் இருக்கும் துளைகள், தனித்து விடபட்ட பாறைகள் சூழ்ந்த கற்கள் போன்ற விஷ ஜந்துக்கள் வாழும் இடங்களை வெளிபடுத்தும் ராசி.
ஸ்திர நீர் ராசியாகி, மறைவு ராசியாகவும் வருவதால் கிணறுகளில் ஊறும் நீர், ஆழ்கடலில் சலனமற்ற நீர், ஆழ்துளை கிணறு நீர், ஆழமானதாகவும் அதே சமயம் சலனமே இல்லாத ஏரி, குளம், குட்டை தேங்கிய நீரையும் குறிக்கும் ராசி.
கடந்த ஆண்டு அளவுகடந்த மழை பொழிவை கொடுத்து, பத்து இருபது ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பல குளங்கள் ஏரிகள் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று உண்டாக்கியது விருச்சிகத்தில் பெயர்ச்சியான கேது பகவானால்.
விருச்சிகத்தில் சூரியன், செவ்வாய், குரு இருப்பது அந்த ராசியை வளர்ப்பார்கள், கேது விற்கு விருச்சிகம் மீதான புரிதல் மிகவும் அதிகம்.
விருச்சிகத்தில் ராகு சனி இருப்பது அவ்வளவு சிறப்பு கிடையாது.
உங்கள் ராசிக்கும் இது போன்ற ராசியின் இயல்பை படிக்க கீழே நீங்கள் எந்த ராசி என்பதை கமெண்ட் பண்
#padmahazan
No comments:
Post a Comment