Tuesday, March 15, 2022

அரசு வேலை பெறுவதற்கான கிரக அமைப்பு

 🍁 அரசு வேலை பெறுவதற்கான கிரக நிலைகள் 🍁 #hazan 


போட்டி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதற்கான கிரக நிலைகளை இந்த பதிவில் காண்போம். 


போட்டி போடுதல் வெற்றி பெறுதல் என்பது 6 மிடமும் 11 இடமும் சார்ந்த நிகழ்வாகும். 


எதிராளியோடு போராடுவது, சக போட்டியாளர்களோடு போட்டி போடுவது ஆறாமிடமும், அதில் வெற்றி பெறுவதை 11 இடத்தின் வலுவும் காட்டும். 


அரசின் அதிகார பணிக்கு சூரியன் அதிக வலுபெற்று,  ஆறாமிடத்தை வெட பத்தாமிடமும்  வலுத்து இருப்பதும், அரசின் கடைநிலை அல்லது அடிமை நிலை பணிக்கு ஆறாமிடமும் சனியும் முதன்மையாக வலுபெற்று சூரியன் கெடாமல் இருக்க வேண்டும். 


அதிகாரத்தை குறிக்கும் ராஜ கிரகமான சூரியன் மேஷம், சிம்மம்,தனுசு, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்று இந்த ராசிகள் லக்னம் அல்லது ராசிக்கு 2 6 10 பாவகமாக இருப்பது,  #padmahazan 


சூரியனை குரு பார்ப்பது, சந்திரன் பார்ப்பது, சுக்ரன் அல்லது புதனை சூரியன் அஸ்தங்கம் செய்து இருப்பது, 


சூரியன் சமம் பகை நீசமாக ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் 10 மிடமாக இந்த ராசிகளில் சூரியன் இருப்பதும், 


நீசமான சூரியன் நீசபங்கம் திக்பலம் பெறுவதும், 


சிம்ம ராசியை சுபர்கள் பார்ப்பதும் சிம்ம ராசியில் சுபர்கள் இணைவு பெறுவதும் 


போன்ற நிலைகளில் சூரியன் நேரடியாக வலுபெற்று சனி பார்வை இணைவு, ராகு இணைவு, அமாவசை சந்திர இணைவு பெறாமல் இருப்பதும் மிக முக்கியம். 


மேலே சொன்ன நிலைகளை பெற்ற  ஒருவருக்கு லக்னாதிபதி வலுத்து லக்னம் சுபர்களால் பார்க்கபட்டு ஆறாமிடம் குரு சுக்ரன் புதன் சந்திர பார்வை சேர்க்கை பெற்று பத்தில் சூரியன் செவ்வாய் குரு போன்ற ராஜகிரகங்கள் சம்மந்தப்பட்ட தசா வர அவருக்கு அரசில் அதிகாரம் சார்ந்த வேலை கிடைக்கும். #padmahazan 



மேலே சொன்ன அமைப்போடு சூரியன் ஓரளவு வலுபெற்று சனி லக்னம் அல்லது 10 இடத்தோடு சூரியனை விட வலுவாக தொடர்பு கொள்ளும் நிலையில் அந்த ஜாதகருக்கு அரசின் அடிமை பணி அல்லது கடைநிலை பணி கிடைக்கும். 


ராணுவம், போலிஸ், போன்றவற்றிற்கு செவ்வாய் வலுவாகவும், வருவாய் துறைக்கு குருவும், வலுவாக இருக்க வேண்டும். 


நாவி கடற்படையில் பணி புரிய நீர்ராசிகளில் கிரகங்களும், வான்படை ஏர்போர்சில் பணி புரிய காற்று ராசிகளில் கிரகங்களும் சிறப்பாக சுய வலுவோடு இருக்க வேண்டும். 


இறுதியாக இவற்றை பெறுவதற்கு லக்னாதிபதி கிரகம் கெடாமல் பகை, அஸ்தங்கம் , கிரகணம், சனி செவ் ராகு இணைவு பார்வை பெற்று கடுமையான பாவத்துவம் பெற்று இருப்பது போன்ற வலுஇழந்து செயல்படாத நிலையில் இல்லாமல் லக்னாதிபதி நட்பு ஆட்சி உச்சம் குரு சுக்ர புதன் இணைவு பார்வை பெற்று சுபத்துவமாக இருக்க வேண்டும். 





#padmahazan 

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...