Monday, May 30, 2022

பரிவர்த்தனை குரு தசா தரும் ராஜயோகம்

 🍁 கடக லக்னத்திற்கு பரிவர்த்தனை பெற்ற குரு தசா தரும் யோக பலன் 🍁 #hazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


பொதுவாக பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தான் ஆட்சி பெற்ற வீட்டின் பலனை முதன்மைபடுத்தி தரும் என்பது வேத ஜோதிட விதி.


கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக அமைப்பை பாருங்கள்.





ஜாதகர் கடக லக்னம் மகர ராசி பிறந்து தற்போது குரு தசா ஆரம்பிக்க உள்ளது.


இந்த லக்னத்திற்கு யோகம் செய்ய வேண்டிய ராஜயோகாதிபதி செவ்வாய் இணைவில் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார்.


குரு சுக்ர பரிவர்த்தனையாக 9 11 உள்ளது. குரு பரிவர்த்தனையாக 9ம் வீட்டில் உள்ள பலனை தன் குரு தசா முதல் பகுதியில் தர உள்ளார்.


குரு இந்த லக்னத்திற்கு 9ல் நின்ற உச்ச சுக்ரன் மற்றும் புதனின் இணைவில் உள்ள சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளார். #padmahazan 


ஒன்பதாம் இடத்தோடு பரிவரத்தனை பெறுகிறார்.


குருவிற்கு வீடு கொடுத்த சுக்ரனும் உச்சமாகி (கொஞ்சம் அஸ்தங்க) பெற்று இருக்கிறார்.


குரு தன் தசா முதற் பகுதியில் கடவுள் வழிபாடு, கடவுள் அனுக்கிரகம், தந்தை வழியான சொத்து பணம் கிடைப்பது, தந்தை வழியான சுபநிகழ்வு, வாரிசு சம்மந்தப்பட்ட சுபநிகழ்வு, தண பண தங்க நகை சேர்க்கை, போன்ற பலன் முதன்மையாக நடக்கும்.


இதெல்லாம் அனுபவிக்க தேவையான லக்னாதிபதி வலு எப்படி உள்ளது என்று பார்ப்போம்..


லக்னாதிபதியான சந்திர தேய்பிறையாகி பகை வீட்டில் இருந்து தன் வீட்டை தானே பார்த்து லக்னத்தை வலுபெற வைக்கிறார். மேலும் குரு பார்த்த சந்திரனாகவும் உள்ளார். 


இந்த லக்னாதிபதி சந்திர வலு ஏற்ப மேலே சொன்ன யோக பலனை ஜாதகர் அனுபவிப்பார்.#padmahazan


இந்த ஜாதகத்தின் மற்றொரு சிறப்பு...


தன ஸ்தான அதிபதி சூரியன் பாக்கியத்தில் உச்ச சுக்ரனோடு இணைந்து, பாக்கியாதிபதி குரு லாபாதிபதி சுக்ரனோடு பரிவர்த்தனை, 2 9 11 கிரக தொடர்பு இருப்பதும் ஒரு விதமான தனயோகத்தை கொடுத்து உள்ளது. 


குரு தசாவில் அப்படி ஒன்றும் பெரிதாக தன பண கஷ்டம் இல்லாத மேம்பட்ட வாழ்வை ஜாதகர் பெறுவார் என்பது நிதர்னம்.


#padmahazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...