Monday, May 30, 2022

பரிவர்த்தனை குரு தசா தரும் ராஜயோகம்

 🍁 கடக லக்னத்திற்கு பரிவர்த்தனை பெற்ற குரு தசா தரும் யோக பலன் 🍁 #hazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


பொதுவாக பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தான் ஆட்சி பெற்ற வீட்டின் பலனை முதன்மைபடுத்தி தரும் என்பது வேத ஜோதிட விதி.


கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக அமைப்பை பாருங்கள்.





ஜாதகர் கடக லக்னம் மகர ராசி பிறந்து தற்போது குரு தசா ஆரம்பிக்க உள்ளது.


இந்த லக்னத்திற்கு யோகம் செய்ய வேண்டிய ராஜயோகாதிபதி செவ்வாய் இணைவில் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார்.


குரு சுக்ர பரிவர்த்தனையாக 9 11 உள்ளது. குரு பரிவர்த்தனையாக 9ம் வீட்டில் உள்ள பலனை தன் குரு தசா முதல் பகுதியில் தர உள்ளார்.


குரு இந்த லக்னத்திற்கு 9ல் நின்ற உச்ச சுக்ரன் மற்றும் புதனின் இணைவில் உள்ள சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளார். #padmahazan 


ஒன்பதாம் இடத்தோடு பரிவரத்தனை பெறுகிறார்.


குருவிற்கு வீடு கொடுத்த சுக்ரனும் உச்சமாகி (கொஞ்சம் அஸ்தங்க) பெற்று இருக்கிறார்.


குரு தன் தசா முதற் பகுதியில் கடவுள் வழிபாடு, கடவுள் அனுக்கிரகம், தந்தை வழியான சொத்து பணம் கிடைப்பது, தந்தை வழியான சுபநிகழ்வு, வாரிசு சம்மந்தப்பட்ட சுபநிகழ்வு, தண பண தங்க நகை சேர்க்கை, போன்ற பலன் முதன்மையாக நடக்கும்.


இதெல்லாம் அனுபவிக்க தேவையான லக்னாதிபதி வலு எப்படி உள்ளது என்று பார்ப்போம்..


லக்னாதிபதியான சந்திர தேய்பிறையாகி பகை வீட்டில் இருந்து தன் வீட்டை தானே பார்த்து லக்னத்தை வலுபெற வைக்கிறார். மேலும் குரு பார்த்த சந்திரனாகவும் உள்ளார். 


இந்த லக்னாதிபதி சந்திர வலு ஏற்ப மேலே சொன்ன யோக பலனை ஜாதகர் அனுபவிப்பார்.#padmahazan


இந்த ஜாதகத்தின் மற்றொரு சிறப்பு...


தன ஸ்தான அதிபதி சூரியன் பாக்கியத்தில் உச்ச சுக்ரனோடு இணைந்து, பாக்கியாதிபதி குரு லாபாதிபதி சுக்ரனோடு பரிவர்த்தனை, 2 9 11 கிரக தொடர்பு இருப்பதும் ஒரு விதமான தனயோகத்தை கொடுத்து உள்ளது. 


குரு தசாவில் அப்படி ஒன்றும் பெரிதாக தன பண கஷ்டம் இல்லாத மேம்பட்ட வாழ்வை ஜாதகர் பெறுவார் என்பது நிதர்னம்.


#padmahazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Sunday, May 8, 2022

மகேந்திர சிங் டோனி ஜாதக விளக்கம்

 🍁 M S DHONI HOROSCOPE ஜாதக விளக்கம் 🍁 #hazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


கிரிக்கெட்வீரர் மகேந்திர சிங் டோனி ஜாதக விளக்கம். 


பொதுவாக யோக ஜாதகம் என்பது லக்னாதிபதி வலுத்து, 5 மற்றும் 9 குடைய பூர்வ புண்ணிய அதிர்ஷ்டமும் பாக்கிய அதிபதிகளும் நன்றாக இருந்து அதற்கு ஏற்ப யோக தசா வரும் ஜாதகமே யோக ஜாதகம். 


இன்று இந்த பதிவில் பார்க்க இருப்பது உலக புகழ் பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோணி ஜாதகம். 





இவர் ஜாதகத்தில் லக்னத்தில் சனி குரு சந்திரன் இணைவு, 5ல் கேது, 9ல் செவ்வாய், 10ல் சூரியன் புதன் , 11ல் ராகு சுக். #padmahazan 


இவர் கன்னி லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்து சூரிய தசாவில் பிறந்து உள்ளார். 


லக்னாதிபதியான புதன் இங்கே பத்தாமிடத்தில் ஆட்சி பெற்று திக் பல சூரியனோடு பத்தில் இருக்கிறார். பத்தில் ஆட்சி பெற்ற புதனோடு செவ்வாய் மிக நெருக்கமாக இணைந்து உள்ளார். 


லக்னாதிபதியான புதனோடு 2 ராஜ கிரகஙகளான செவ்வாய் மற்றும் சூரியன் இணைந்து உள்ளார்கள். 


லக்னாதிபதி பத்தில் ஆட்சி என்னும் அதிக வலுபெறுவதும் பத்தில் சூரியன் இருப்பதும் ஜாதகர் தலைமை குணம் மிக்கவர், செய்யும் செயலில் பிறரை வழிநடத்தி பெயரும் புகழும் பெறுபவர் என்பது உறுதியாகிறது.


லக்னத்தில் பூர்வ புண்ணிய சனி பகவான் நட்பு வலுவோடு குரு சந்திர இணைவை பெறுகிறார்.பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட ஸ்தானத்தை குருவும் சுக்ரனும் பார்க்க அங்கே கேது பகவான் உள்ளார். #padmahazan 


லக்னத்தில் உள்ள கஜகேசரி யோகம் இவருக்கு எதிரி ( எதிர் அணி) இருப்பார்கள் அதை வெற்றி பெற்று தனக்கு தனி கௌரவத்தை பெறுவார் என்று குறிப்பிடுகிறது. ( எதிரியை வெல்வது கஜகேசரி யோகம்). 


லாபாதிபதி என்னும் வெற்றியை குறிக்கும் சந்திரன் லக்னத்தில் வளர்பிறை சந்திரனாகி இருப்பது ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகள் ஜாதகரை அடையும் என்பதை காட்டுகின்றது. லாபாதிபதி லக்னத்தில் இருப்பது யோகம். 


விளையாட்டிற்கு காரகனான துடிதுடிப்பு வீரியத்தின் அதிபதியான செவ்வாய் பகவான் தன் வீடான விருச்சிகத்தை பார்த்து வலுபடுத்தி இருகிறார். 


இவரது ஜாதகத்தில் சுக்ரன் ராகு இணைவில் பாவத்துவமும், குருவும் சந்திரனும் சனி இணைவில் பாவத்துவமும் பெறுகிறார். 


செவ்வாய் பகவான் மட்டுமே குரு பார்வை பெற்று சுக்ரனின் வீடான ரிஷபத்தில் இருந்து ஆட்சி பெற்ற புதனோடு 5 டிகிரிக்குள் இணைந்து உச்சபட்ச சுபத்துவ கிரகமாக செவ்வாய் உள்ளார். விளையாட்டு சார்ந்த துறையில் ஜொலிக்கும் வலுவில் செவ்வாய் உள்ளார். #padmahazan 


இவ்வளவு யோகமாக ஜாதகம் இருந்தாலும் நடக்கும் சம்பங்களை குறிப்பது தசா அமைப்பு தான். யோகத்தை தரும் தசாக்கள் வருவது அவசியம். 


1979ல் பிறந்த இவருக்கு சூரிய தசா டிசம்பர் 1985 வரை இருந்துள்ளது. அதன் பின்னர் 1995 வரை கிட்டதட்ட 15 வயது வரை சந்திர தசா நடைபெற்று உள்ளது. 


செவ்வாய் ரிஷபத்தில் 28 டிகிரியில் ராசியின் விளிம்பு நிலையில் உள்ள அவரது 4ம் பார்வை கன்னியில் 1 டிகிரியில் சரியாக 3 டிகிரிக்குள் பார்வை பெற்று சந்திர தசா முதலே விளையாட்டு மீதான ஆர்வமும் பயிற்சியும் சென்று உள்ளார். ( செவ்வாயின் 4ம் பார்வை சந்திரனின் மீது) 


1995 பிறகான 2002 வரை விளையாட்டை தரும் செவ்வாயின் தசாவும் சுய சாரமான மிருகசீரிட நட்சத்திரத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் விளையாடி வந்து உள்ளார். #padmahazan 


2002 டிசம்பரில் ஆரம்பித்த ராகு தசாதான் இவரை இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து பெரிய பெயர் புகழை கிரிக்கெட் உலகிற்கு எடுத்து சென்றது. 


சாதாரண நிலையில் இருப்பவரை திடீர் என உச்சத்தில் கொண்டு சென்று அமர வைத்து அழகு பார்ப்பதில் ராகுவுக்கு நிகர் வேறெந்த கிரகமும் ஈடு ஆகாது. 


இவரது ராகு தசா இந்த லக்னத்தின் பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட ஸ்தான அதிபதியான 5ம் அதிபதி சனியின் பூசம் நட்சத்திரத்தில் அமர்ந்து, மற்றொரு பாக்கிய ஸ்தான 9ம் அதிபதி இணைவில் இருந்து ராகு கடக ராகுவாக தசா நடத்த தொடங்கி உள்ளார். ராகு நின்ற வீட்டின் அதிபதியை போல செயல்படுவார் என்பதை போல வீடு கொடுத்த சந்திரனும் வளர்பிறை சூரிய கேந்திரமாக லக்னத்தில் உள்ளார். #padmahazan 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


பொதுவாகவே மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ராகுவிற்கு சிறப்பான ராசிகளாகவும் இங்கே இருக்கும் ராகு குரு சுக்ர போன்ற சுபர் தொடர்போடு 3 11 போன்ற உபஜெய ஸ்தானத்தில் தசா நடத்தும் போது லக்னாதிபதி வலுத்ண ஜாதகரை உயர் உச்ச நிலைக்கு அந்த ஜாதகர் இருக்கும் துறையில் கொண்டு செல்வார் என்பது ஜோதிட விதி. 


இங்கே ராகு 5க்குடைய சனி சாரத்தில் நின்று, 9 குடைய சுக்ரன் இணைவில் கடக ராகுவாகி 11ம் இடம் என்னும் வளர்ச்சி முன்னேற்றம் தரும் தசாவாக உள்ளது.


இவரது ராகு தசா புதன் புத்தி கேது அந்தரத்தில் உலக கிரிக்கேட் கோப்பையை வெற்றி பெற்று இந்தியாவிற்கு வாங்கி கொடுத்தார். 


லக்னாதிபதியான புதன் 10ல் ஆட்சி பெற்று இருக்கும் நிலையில் நிச்சயமாக ஜாதகருக்கு தொழில் வழியான நற்பெயர் புகழ் பெற வேண்டும். புதனோடு செவ்வாய் இணைந்து செவ்வாய் சாரத்தில் புதன் இருப்பதும் விளையாட்டு சார்ந்த பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.


ராகு தசாவும் அதற்கு வெற்றியை தரும் ஸ்தானத்தில் இருந்து ஆட்சி பெற்று ஜாதகருக்கு யோகமான காலகட்டமாக இருந்துள்ளது.


2020 டிசம்பரோடு இவரது ராகு தசா முடிந்து விட்டது. 18 வருட ராகு தசாவில் 2002 முதல் 2020 வரை தவிர்க்க முடியாத கிரிக்கெட் ஆளுமையாக மகேந்திர சிங் தோணி இருந்தது கொடுத்த பலன் அனைத்துமே ராகு தந்த பலனே. 


தற்போது தோணிக்கு குரு தசா குரு நான்கிற்கு உடைய சுக ஸ்தான அதிபதியாகி லக்னத்தில் சனியோடு இணைந்து சூரியனின் சாரத்தில் குரு தசா நடக்கிறது.#padmahazan 


4ம் அதிபதியாகி குரு சனியோடு இணைவதால் உடல் உழைப்பை போட்டு தோட்ட கலை, கோழி கால்நடை வளர்ப்பில் ஆர்வமாக உள்ளார். 


அதே சமயம் நடக்கும் குரு தசா சூரியன் சாரம் பெற்று 10ல் இருக்க குரு தசா முழுவதும் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு குருவாக கோட்ச் ஆக வழிநடத்தி போகும் நபராக இருப்பார். மாற்று கருத்தே இல்லை. 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


ராகு தசாவில் பெரும் பணம் பெற காரணம் தன ஸ்தான அதிபதி சுக்ரனோடு இணைந்து தசா நடத்தியதும் ஒரு காரணம். 


2 9 11 அதிபதிகள் சம்மந்தப்பட்ட காலகட்டத்தில் ஒருவர் பெரிய அளவிலான தன சேர்க்கை பெறுவார் என்பது குறிப்பிட தக்கது. 


இவருக்கு பத்தில் சூரியன் இருந்து, லக்னத்தில் சனி குரு மாற்றும் சந்திரனோடு சுபத்துவமாக இருந்த காரணத்தால் இளம் வயதிலேயே மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 


செவ்வாய் அதிக சுபத்துவமாக உள்ளபடியால் இந்திய ராணுவத்தில் கௌரவ உயர் பதிவிலும் அங்கம் வகிக்கிறார்.


இங்கே 2 9 அதிபதியோடு இணைந்த 11மிட ராகு தனது தசாவில் மஹா தன யோகத்தை எடுத்து கோடிகளில் தன சேர்க்கையை கொடுக்கிறார். 


எவர் ஒருவருக்கு லக்னம் லக்னாதிபதி வலுத்து சுப தொடர்பு பெற்ற ராகு தசா வருகிறதோ அவர் நிச்சயமாக அவர் இருக்கும் துறையில் கொடி கட்டி பறப்பார்கள். 


இதே போல யோக ஜாதகமும் சரியான யோக தசாவும் நடக்கும் மற்றொரு இந்திய வீரர் இந்திய அணியின் கேப்டனாக வரும் நிலையில் மற்றொரு world cup பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு.


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


🤩 #padmahazan 🤩 #dhoni #msdhoni

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...