Wednesday, March 13, 2024

கிரக தசா பலன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது ஏன் ...?

🍁 கிரக தசா பலன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது ஏன் ...? 🍁 #hazan 

12 லக்னத்தில் பிறந்த அனைவருக்கும், 9 கிரக தசாக்களில் ஏதோ ஒன்று நடக்கிறது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன் இருப்பது இல்லையே..? ஏன்..? 

ஒருவருக்கு சூரிய தசா நடக்கிறது , சொந்த தொழிலில் முதலாளியாக இருக்கார், கௌரவமாக இருக்கார். தனித்து சுதந்திரமாக சுற்றி கொண்டு இருக்கிறார் , ஒரு பக்கம் கௌரவமான வாழ்க்கை மறுபக்கம் அபரிவிதமான வருமானம் தருகிறது சூரிய தசா. 

மற்றொருவருக்கும் சூரிய தசா நடக்கிறது , அவர் அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக இருக்கார், அதிகாரிகளுக்கு பயந்து பயந்து வேலைக்கு போகிறார். அவருக்கும் மாத சம்பளம் வருகிறது. பண பொருளாதாரம் நன்றாக உள்ளது ஆனால் சுதந்தரம் இல்லையே..? 

ஏன் இந்த பலன் மாறுபாடு..? 

இருவருக்கும் ஒரே சூரிய தசா தானே நடக்கிறது.

இந்த பலன் வேறுபாடுகளை தருவது... 

இருவரது ஜாதகத்தின்

1). லக்னாதிபதி வலு & லக்னத்தின் மீதான பிற கிரக தொடர்பால் உண்டாகும் குணம் செயல்பாடு அந்தஸ்து நிலை கவனிக்க வேண்டும் . #padmahazan 

லக்னாதிபதி லக்னத்திற்கு மறையாமல் நட்பு நிலை அல்லது தர்மகர்மாதிபதி யோகம் கஜகேசரியோகம் மங்களயோகம் மாளவியாயோகமு மாதிரியான தன் நட்பு கிரக பார்வை இணைவில் ஆதிபத்திய சுப பலனை தந்து ஜாதகரை நன்றாக வைப்பார்.

மாறாக பகை நீச வீடுகளில் ராகு கேது இணைவில் சனி செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் 6 8 12 பலவீன அமைப்பில் ஜாதகர் கஷ்டபடுவது மாதிரியான பலனை தரும். 

2). 5 & 9 பாவகமான அதிர்ஷ்டம் பூர்வ புண்ணியம் பாக்கிய ஸ்தானம் பெற்ற வலு ஜாதகர் உழைப்பை விட அதிகபடியான உயரத்தை அடைவாரா..? என்பதை காட்டும். 

3). லக்னத்திற்கு தசா நடத்தும் சூரியன் என்ன ஆதிபத்தியம் பெறுகிறார்..? லக்ன சுபரா..? அசுபரா..? என்பதை பொறுத்தும். 

4). சூரியன் பெற்ற நட்பு பகை நீசம் ஸ்தான பலம் , மற்றும் லக்ன ரீதியிலான சிம்ம வீடு ஆதிபத்தியத்திற்கு ஜாதகத்தில் சூரியன் இருக்கும் பாவக நிலை. 

5). சூரியன் உடன் இணைந்த பார்த்த கிரகத்தால் சூரியனுக்கு உண்டாகும் சுப / பாவ கிரக வலு. 

குரு பார்த்த சூரியன் சுப காரகத்துவ யோக பலனும், சனி பார்த்த சூரியன் அசுப காரகத்துவ கெடுபலனும் , கூடுதலாக சூரியன் லக்ன பாவி ஆகும் போது பாதிப்பை தருவார். 

6). சூரியனுக்கு வீடு கொடுத்த கிரகம் பெற்ற வலு

7). சூரியன் பெற்ற நட்சத்திர நாதன் நிலை & சூரியன் பெற்ற நவாம்ச நிலை. #padmahazan 

8). தசா நடத்தும் சூரியனுக்கு புத்தி நாதர்கள் மற்ற கிரகங்கள் இருக்கும் பாவக நிலை. புத்தி நாதர்கள் செயல்பாடுகள். 

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு பலனை ஏற்படுத்தும். 

இத்தனை விஷயங்களை தனி தனியாக இரண்டு ஜாதகங்களில் கவனித்து பார்க்கும் போது , 

சொந்த தொழிலில் முதலாளியாக இருக்கார், கௌரவமாக இருக்கார். தனித்து சுதந்திரமாக சுற்றி கொண்டு இருக்கிறார் , ஒரு பக்கம் கௌரவமான வாழ்க்கை மறுபக்கம் வருமானம் தரும் சூரிய தசா பெரும்பாலான அமைப்பில் சுப தொடர்பிலும் 1 5 9 வலுவாக நன்றாக அமைந்தும் இருக்கும். 

அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக இருக்கார், அதிகாரிகளுக்கு பயந்து பயந்து வேலைக்கு போகிறார். அவருக்கும் மாத சம்பளம் வருகிறது. பண பொருளாதாரம் நன்றாக உள்ளது ஆனால் சுதந்தரம் இல்லையே..? மேலே சொன்ன அமைப்பில் ஓர் சில பாதிக்கபட்ட அமைப்பில் சூரியன் அரை மனதாக ஜாதகருக்கு பணத்தை கொடுத்து ஓரளவு நன்றாக வாழ வைப்பார். 

9 கிரக தசாக்களும் எத்தகைய பலனை தருவார்கள் என்பதை மேலே சொன்ன அமைப்புகளை ஆராயும் போது அந்த கிரகம் எந்த பலனை தரும் என்பதை உறுதிபடுத்தலாம். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...