அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற விதமாக
ஓர் கிரகம் தனித்து ஓர் ராசியில்
1). உச்சம் பெற்று அதோடு
2). வர்கோத்தமம் பெற்று அதோடு
3). திக் பலமும் பெற்று
மித மிஞ்சிய அமைப்பை பெறும் போது அந்த கிரக பலன் நிறைவாக இருக்காது.
உதாரணமாக,
1). கடக லக்னத்திற்கு 10 உச்சமாகும் சூரியன் திக்பலம் பெற்று கூடுதலாக அஸ்வினி 1 பாதத்தில் வர்கோத்தம் பெற்று இருப்பது, சூரியன் மித மிஞ்சிய வலுவாகவும் , ஆனால் ஜாதகர் சாதாரண தொழிலில் சம்பாதித்து கொண்டு இருப்பார் அல்லது கடைநிலை அரசு பணியில் இருப்பார். இங்கே சந்திர லக்னாதிபதியான நன்றாக இருந்தால் மட்டுமே உச்ச சூரியன் அவரது சுப பலனை நல்ல வழியில் தருவார். மற்றபடி உச்ச வலு வீணாகவே பலனற்று சாதாரண நிலையில் ஜாதகரை வைத்து இருக்கும்.
2). மேஷ லக்னத்திற்கு 7ல் உச்சமாகும் சனி திக் பலம் பெற்று கூடுதலாக சித்திரை 3 பாதத்தில் வர்கோத்தமம் பெறுவது, திருமண வாழ்வை பாதிக்கும். அல்லது திருமணம் தாம்பத்ய பாதிப்பை தரும். மாறாக நீண்ட ஆயுள் பலத்தை தரும். இங்கே சனி வக்ரமாகி இருப்பது இந்த பாதிப்பை குறைக்கும்.
3). கடக லக்னத்தில் அல்லது மீன லக்னமாகி 5ல் உச்ச வர்கோத்தம குருவாக புனர்பூசம் 4 பாதத்தில் இருப்பது, பணம் சார்ந்த பொருளாதார பாதிப்பை தரும். மீன லக்னகாரருக்கு குழந்தை சார்ந்த பாதிப்பை தரும். இங்கே குரு வக்ரமாகி இருப்பது நல்லது.
4). தனுசு லக்னத்திற்கு 4ல் உச்சமும் திக்பலமும் வர்கோத்தமும் பெற்ற சுக்ரன் ரேவதி 4 பாதத்தில் இருப்பது ஆடம்பர சொகுசு வாழ்வை தந்து மறுபக்கம் மணவாழ்க்கை பாதிப்பு அல்லது அளவு கடந்த கடன் நோய் பாதிப்பை சுக்ரன் தருவார். இங்கே சுக்ரன் நீச புதன் அல்லது சூரிய இணைவில் இருப்பது நல்லது. பாதிப்புகள் குறையும்.
5). குருவும் பௌர்ணமி நெருங்கி கொண்டு இருக்கும் சந்திரன் நின்ற பாவகமும் ,
6). குரு சுக்ரன் இணைந்து சந்திரனால் பார்க்கப்பட்ட பாவகமும்
பாவக ரீதியிலான ஆதிபத்திய காரகத்துவ பாதிப்பை தரும்.
உச்ச வலுவில் வர்கோத்தம் பெறுவது
உச்ச வலுவில் திக் பலம் பெறுவது போன்றவை அளவுக்கு அதிகமாக வலுவில் ஜாதகருக்கு பாதிப்பை கிரகங்கள் தரும். #padmahazan
இது மாதிரியான நிலைகளில் உச்ச கிரகம் ஓர் நீசனோடு இணைவது , தன் நட்பு கிரகமாக வரும் மற்றொரு பாவ கிரக இணைவில் இருப்பது தன் உச்ச வலுவை பங்கிட்டு தன் சுய இயல்பு நிலைக்கு அந்த உச்ச கிரகம் வந்துவிடும்.
சம வலு பெற்ற கிரகம் , பகை வலு பெற்ற கிரகம் , நட்பு வலு பெற்ற கிரகம், லக்ன 1 5 9 சுபர் ஆக வந்து வர்கோத்தமம் பெறுவது அல்லது திக் பலம் பெறுவது நல்லது.padmahazan ஓர் கிரகம் நேரடியாக தான் இழந்த வலுவை மீண்டும் மறைமுகமாக பெறும் நிலைதான் வர்கோத்தமம் திக் பலம் போன்றவை.
ஏற்கெனவே உச்சம் என்கிற வலுவாக உள்ள ஓர் கிரகம் திக்பலம் வர்கோத்தமம் போன்ற வலுவை பெறுவது போன்றவை,
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற வலுவை எட்டிய பாதிப்பை ஏதோ ஓர் வழியில் தரவே பார்க்கும்.
மித மிஞ்சிய காமமும் , அளவுக்கு அதிகமாக பணமும் , தேவை விட மேலான ஆளுமையும் ஒருவரை மனம் உடல் வாழ்வை பாதிப்பை தரும் தவிர முன்னேற்றத்திற்கு உதவாது.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY