🍁 எதிர்கால உலகம் _ Virtual reality world 🍁 #hazan
இன்றைய உலகில் டெக்னாலஜி அனைத்து இடங்களிலும் தனக்கென பெரும் இடத்தை பிடித்து விட்டது. டெக்னாலஜி இல்லாத துறையே இல்லாத அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்ந்து விட்டோம்.
Virtual reality என்னும் டெக்னாலஜி அடுத்த மூப்பது வருடத்தில் பெரும் வளர்ச்சியை பெற உள்ளது. தற்போது facebook மெட்டாவர்ஸ் என்னும் சொல்லை பயன்படுத்தி இதற்கு புது உருவாக்கத்தை கொடுக்க உள்ளனர்.
இந்த metaverse உலகை எப்படி மாற்றும்..?
இந்த நாம் வாழும் மெய்யான உலகை போலவே computer coding ஆல் உருவாக்கபட்ட மற்றொரு பொய்யான உலகை டெக்னாலஜி உதவியோடு உருவாக்க முடியும். உதாரணமாக fire fire PUBG போன்ற மாய நகரத்தை அந்த டெக்னாலஜி கொண்டு இருக்கும். #padmahazan
இதனால் என்ன மாதிரி பயன்கள் இருக்கும்.
வீட்டில் இருந்தபடியே நகைக்கடை, ஜவுளிக்கடை, போன்ற ஷாப்பிங் போகலாம், அங்கே போட்டு பார்த்து பொருத்தமாக உள்ளதா பிடித்ததை நேரில் பார்த்து ஆர்டர் பண்ணலாம். உங்க உடல் வீட்டில் இருக்கும், உங்களது செயல்பாடுகள் அந்த டெக்னாலஜி உலகில் இருக்கும். அதாவது சென்னையில்இருக்கும் நீங்கள் டெல்லியில் இருக்கும் ஷாப்பிங் மாலில் நேரில் பார்பபது போலான டெக்னாலஜி உலகில் பர்சேசிங் பண்ணலாம். நீங்கள் செலவிடும் நேர தூர அலைச்சலை மாற்றும்.
கணவனோ மனைவியோ வெளிநாடுகளில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஒன்றா ஒரு நாட்டிற்கோ இடத்திற்கோ அந்த மாய உலகில் vacation போகலாம்.
விருப்பபட்டவரை வீட்டில் இருந்தபடியே அந்த மாய உலகில் சந்திக்கலாம்
மருத்துவம் பொறியியல் வானியல் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் அதுசார்ந்த பாடங்களுக்கு நிகழ்வுகளுக்கு இடையே பயில்வதை போன்ற நிலை வரும்.
அதாவது தோல் இல்லாத டெக்னாலஜி உடலில் நரம்புகள் எலும்புகள் உறுப்புகள் எப்படி அமைந்துள்ளது என்று நேரில் பார்ப்பது போலான படிப்பு நிலை பெறுவார்கள்
நிஜ உலகில் உங்களது துணையோ தாயோ தந்தையோ இறந்த பிறகு அவர்களை போலவே உருவ ஒற்றுமை குண ஒற்றுமை கொண்ட போலியான ஒரு நபரை டெக்னாலஜி உலகில் நீங்கள் பேசலாம் அவர்களோடு அந்த உலகில் நீங்கள் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். இன்னும் பல ஏகப்பட்ட மாற்றங்கள் வர உள்ளது #padmahazan
இயல்பான நீங்கள் படத்தில் உள்ளதை போல அந்த virtual reality box யை முகத்தில் மாட்டி கொண்டதும் அந்த டெக்னாலஜி உலகில் போய் விடுவீர்கள். அதற்கான சில செலவுகளையும் கட்டணங்களையும் அதை நிறுவும் நிறுவனத்திற்கு நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.
இதனால் வருங்காலத்தில் அபரிவிதமான டெக்னாலஜி முன்னேற்றமும் அதே அளவிற்கு சமுதாய சீரழிவும் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும்.
இந்த நிஜ உலகை போலவே மாயமான இதற்கு இணையான உலகை டெக்னாலஜி வழியாக பார்க்க போகும் காலம் வர போகிறது.
நமது பேரனோ பேத்தியோ அதை நமக்கு நிச்சயமாக பயன்படுத்த கற்று தருவார்கள்.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த டெக்னாலஜிதான் உலகமாக மாறும்.
ஆனால் சாப்பிடுவது தூங்குவது எல்லாம் இந்த நிஜ உலகில் தான் நடக்கும். அதை மாற்ற முடியாது.
இதை பற்றி மேலும் படிக்க metaverse என்று தேடி படியுங்க.
இந்த பதிவின் முடிவாக சொல்ல இருப்பது பிரமாண்ட மாய நாயகன் ராகு பிடியில் இருந்த உலகம் சிக்க உள்ளது என்பதுதான்.
🤩 #padmahazan 🤩 #Metaverse #facebookmetaverse #virtualrealityworld #VR